Thursday, March 10, 2016

லெமூரியா (Lemuria) கண்டம், குமரிக் கண்டம் என்பன பற்றிய தெளிவான ஆய்வு

லெமூரியா கண்டம் உண்மையா? 
குமரிக்கண்டம் என்பது உண்மையா? 
லெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்றா?

(ஒரு விரிவான ஆய்வு)



படம்: குமரிக்கண்டம் பற்றி அதன் ரசிகர் ஒருவர் வடிவமைத்த படம்.

இவை பற்றி சில ஞானப் பழங்கள் சொல்லும் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக நடுநிலையாக விஞ்ஞானபூர்வமாக ஆராய்வோம். (முடியுமான வரை இவ்வகையான ஆதாரங்களை திரட்டியுள்ளேன். ஏதாவது விடுபட்டிருந்தால் அறியத்தாருங்கள்)

முதலில் லெமூரியா கண்டம் பற்றி பார்ப்போம்.

லெமூரியா கண்டம் உண்மையா? 

லெமூரியா (Lemuria) கண்டம் பற்றிய கொள்கை 19ம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது. 
இது பற்றி பார்ப்போம். 
பெயர் வரக் காரணம்:
Lemur என்பது மடகஸ்காரில் காணப்பட்ட ஒருவகை குரங்கு. அது மடகஸ்காரில் காணப்படுகிறது. இதனுடைய சில எச்சங்கள் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டதாக 19ம் நூற்றாண்டில் (1864) விலங்கியலாளர் Philip Sclater என்பவரால் எழுதப்பட்ட The Mammals of Madagascar (மடகஸ்காரின் பாலூட்டிகள்) என்ற கட்டுரையில் குறிப்பிட்டார். 



படம்: லெமூர் குரங்குகள்


பூகோள ரீதியாக வேறுபட்ட மடகஸ்கார் மற்றும் இந்தியாவில் எவ்வாறு ஒரே இன விலங்கு காணப்பட முடியும்? இந்தக்கேள்விக்கு அவர் அளிக்க முற்பட்ட விடைதான் லெமூரியா கண்டம். எப்படியென்றால் மடகஸ்காரையும் இந்தியாவையும் இணைத்து ஒரு கண்டம் இருந்தது. அதனூடாக லெமூர் குரங்குகள் இடம்பெயர்ந்திருந்தது பின்னர் அந்தக்கண்டம் கடலுக்குள்ளே போய்விட்டது. இதுதான் அவர் சொன்ன கொள்கை. லெமூர் குரங்குகள் நடமாடி திரிந்ததால் லெமூரியா என்று பெயரும் வைத்துவிட்டனர். 

சிறிது காலத்திற்குள்ளாகவே இந்த கொள்கை அறிவியலாளர்களால் நிராகரிக்கப்பட்டது. காரணம் இதற்கு அடுத்து வந்த காலப்பகுதியில்தான் கண்டப்பெயர்வு கொள்கை (Continental drift) கண்டறியப்பட்டது. அதாவது இன்று விலகியிருக்கும் பெருங்கண்டங்கள் ஏற்கனவே ஒன்றாகவிருந்தன. பின்னர் ஏற்பட்ட பூகோள மாற்றங்களால் இவை பிளவடைந்து நகரத்தொடங்கின. இதன்போது இரு வேறுபட்ட புவித்தட்டுக்கள் மோதும் போது மலை உருவாக்கங்கள் ஏற்பட்டன. இவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்த மடகஸ்கார் பிரிந்து சென்று ஆபிரிக்காவின் அருகில் நிலை கொண்டது. இதைக்கொண்டு பல உயிரினங்களின் பரம்பலினை விளக்க முடியும். 

இதனால் நிலம் கடலுக்குள் செல்லும் கதை நிராகரிக்கப்பட்டது.

~~~***~~~

இப்போது தமிழ் நாட்டில் எவ்வாறு கைவிடப்பட்ட லெமூரியா கண்ட கதை மீண்டும் பிரபலமானது என்று பார்ப்போம்.

இங்கே உள்ள வெறித்தனமான தமிழ் பற்றாளர்களின் அரைகுறை அரசியலின் விளைவு:
இலக்கியங்களில் தெற்கில் குமரிக்கண்டம் என்று ஒரு தமிழ் நாடு இருந்ததாகவும் அங்கு ஆறுகள் ஓடியதாகவும் தமிழ் சங்கங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதை தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் கீழே என்று விளங்கி கடற்கோள் அனர்த்தத்தால் கரையோரம் மட்டுமன்றி முழு கண்டமுமே கடலுக்குள் போய்விட்டது என்று கூறினர்.

இப்போது இங்குள்ள சில வில்லேஜ் விஞ்ஞானிகள் இதற்கு விஞ்ஞானச்சாயம் பூச முற்பட்டபோது லெமூரியா என்ற கைவிடப்பட்ட பெயரைக்கண்டு அதை தூசு தட்டி சம்மந்தமில்லாத இடத்தில் பொருத்தி அதுவும் அவுஸ்திரேலியா வரை பொருத்தி அழகு பார்த்தமை கொடுமையிலும் கொடுமை.
இந்தக் லெமூரியா கதைக்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக காண்போம்.


•பிளாட்டோ காமெடி:
ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு கண்டம் இருந்ததாம் என்று அவரின் தாத்தா பாட்டி சொல்லியிருக்கின்றனர். (பய புள்ள சாப்பிடாம திரிந்திருப்பான். அவங்க கதை சொல்லியிருக்காங்க)

இவ்வாறான விஞ்ஞான சான்றுகளுடன் நிரூபிக்கப்படாத கதைகள் அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.



படம்: ஜிப்ரால்டர் Gibraltar 

ஒரு கதைக்கு அது சரி என்றே வைத்துக்கொள்வோம். பிளாட்டோ இருந்தது கிரீஸ் (Greece). அங்கிருந்து ஜிப்ரால்டர் (Gibraltar) க்கு மேற்கே என்று சொன்னால் அது அன்று அறியப்படாதிருந்த அமெரிக்க பெருங் கண்டத்தை குறிக்கும் என்று சிறு பிள்ளையும் சொல்லிவிடும். 

• Homo sapiens லெமூரியாவிலிருந்து தோன்றினானாம். Huxley சொன்னாராம். என்னவென்றால் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏணிகைத்தாலும் எட்டாத அளவு வித்தியாசங்கள் புத்திக்கூர்மையிலும் நடவடிக்கைகளிலும் இன்னும் பல அமைப்பியல் மற்றும் மூலக்கூற்றியல் ரீதியிலும் காணப்படுவதால் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கொள்கை விஞ்ஞான ரீதியில் ஆட்டங்கண்டுள்ளது. இதை தாங்கிப்பிடிக்க Huxley க்கு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஒரு உயிரினம் தேவைப்பட்டது. இல்லாத ஒரு இனத்தை இல்லாத ஒரு நாட்டில் வாழ்ந்ததாக கதை விட Huxley எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

ஆனால் அந்த மனிதக்குரங்கு நாங்கள்தான் என்று இந்த குமரிக்கண்ட ஆராய்ச்சி குமரன்கள் இதை ஆதாரமாக காட்ட முற்பட்டது முழு தமிழ் இனத்தையும் கேவலப்படுத்த செய்யப்பட்ட முயற்சி என்பதை இவர்கள் உணரவில்லை.


• இது போக சில மிகச்சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களையும் ஒருவர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைத்துள்ளார் என்றாலும் ஆய்வின் முழுமை கருதி அதையும் கூறிவிடுகிறேன்.

பிலாவற்ஸ்கி எனும் ஒரு பெண் தனக்கு மகாத்மாக்கள் ஒரு ஆன்மீக புத்தகம் தந்ததாகவும் அதில் லெமூரியா பற்றி கூறப்பட்டிருப்பதாகவும் 1880 இல் கூறினாராம். (முடியல...)

லெமூரியாவின் பழைய புத்திஜீவிகள் இன்று கலிபோர்னியாவில் மலைகளில் (ப்ளீஸ் சிரிக்காதீங்க...) வாழ்கிறார்களாம். வெள்ளை கயிறால் ஆடை அணிகிறார்களாம் ஆகவே லெமூரியா உண்மை (ஷ்ஷபா....)


குமரிக்கண்டமாவது உண்மையா?

• இலக்கியங்கள்:
குமரி நாடு என்று சொற்கள் சிலப்பதிகாரம் போன்ற சில நூற்களில் காணப்படுவது உண்மை. ஆனால் இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படக்கூடியதா என்பதே ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டுயது.

ஒரு சில கவிதைகளை வைத்து ஒரு பெரிய கண்டத்தையே கற்பனையில் உருவாக்குவது தமிழ்நாட்டின் ஏனைய ஆய்வாளர்களையும் சிறுபிள்ளைத்தனமாக மற்றவர்கள் பார்க்க வழி செய்யும் என்பதையும் விட எதிர்கால சந்ததியினருக்கு ஒர் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

தெற்கில் ஒரு தமிழ் பேசும் நாடு என்பது தமிழ் நாட்டை குறிக்கக்கூடும். 

அதிலுள்ள ஆறுகள் அன்று இருந்து இன்று வற்றிப்போன ஆறுகளாக இருந்திருக்க முடியும். 
அல்லது வேறு பெயரில் தற்போதைய ஆறுகளையே குறித்திருக்க கூடும்.
அல்லது காவியத்தில் வரும் கற்பனைகளாக இருக்கக்கூடும்.

இவர்களின் கற்பனைக்குதிரை இவற்றோடு நிற்கவில்லை. சிலப்பரிகாரத்தில் பஃறுளி ஆறு என்று ஒரு சொல் வருகிறது. இதற்கு அடியார்க்கு நல்லார் எனும் ஓர் ஆராய்ச்சிப் புலி எழுதிய விளக்கம் புல்லரிக்க வைக்கிறது. 
அந்த ஆற்றுக்கு பக்கத்தில் ஏழு வகையான ஏழேழு நாடுகளாக மொத்தம் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்தது என்று அடித்து விட்டிருக்கிறார். ஏன் ஏழு வகையான தாவரம் வளரும் நாடு? ஏன் ஒவ்வொன்றிலும் ஏழு? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற தைரியம் அடியார்க்கு நல்லார் என்பவருக்கு.

கடற்கோள் (சுனாமி Tsunami) என்பது கரையோரங்களை அழித்து விடும் பெரும் அலை. கற்பனைக் கண்டம் காணாமல் போனதை சுனாமியின் தலையில் போட்டு தான் தப்பித்தது தனித்திறமை. 

• கடலியல் ஆதாரம்:
Ultrasonic probing இல் இந்து சமுத்திரத்தின் தெற்கில் மலைத்தொடர் ஒன்று உள்ளதாம் ஆகவே இது குமரிக்கண்டம். 
கேட்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும் உலகம் பூராகவும் கடலுக்கடியில் பெரும் பெரும் மலைத்தொடர்கள் இருப்பதால் இதை வலுவான சான்றாக கொள்ள முடியாது. 
இதை ஒரு சான்றாக எடுத்துக்கொண்டாலும் அந்த மலையிலிருந்து தொல்பொருள் சான்றுகள் கண்டறியப்படும் வரை இதை நிரூபிக்கப்பட்ட உண்மையாக கருத முடியாது.

குருதி ஆதாரம்:
செவ்விந்தியர் தென்னிந்தியர் இருவரின் குருதி வகையும் ஒத்திருந்ததாக சோவியத் ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார் என்ற கூற்று.
விளக்கம்: 
இது பண்டைய உலகின் கப்பற்பயணம் பற்றிய அறிவை குறைத்து மதிப்பிட்டதன் விளைவே. கொலம்பஸுக்கு முன் கப்பலே இருக்கவில்லை என்பது போல் சிந்தித்து இந்தியாவிலிருந்து தென் அமெரிக்கா வரை குமரிக்கண்டத்தை வரைந்து விட்டனர் நம் ஆராய்ச்சிப் புலிகள்.

அகிலத்திரட்டு அம்மானை:
ஆய்வின் முழுமைக்காக இதையும் விளக்க வேண்டியுள்ளது. குமரி 152 மைல் பரந்திருந்ததாம். இதில் 16008 வீதிகளாம். (வீடே இருந்திருக்காது. மரம் மட்டை கூட வீதி மட்டும்தான்).

இராமாயணத்தில் இடைச்சங்கம்:
குமரிக்கண்டத்தில் இடைச்சங்கம் இருந்தது. ராமாயணத்தில் இடைச்சங்கம் இருந்த ஊரின் பெயர் வருகிறது. ஆகவே குமரிக்கண்டம் true. (வாவ்...) வாட் எ லாஜிக். (இவர்கள் ஊர் பெயர் ஒற்றுமையை காணும் முறையை பின்னர் பார்ப்போம்) 

அது கூட பரவாயில்லை. இதனால் வால்மீகியும் இடைச்சங்கத்தில் உறுப்பினராக இருந்தவராம். (உங்களை போலத்தான் எனக்கும் கடுப்பாகியது... பொறுமை... பொறுமை...)
(விட்டா ஷேக்ஸ்பியர் கூட சங்க உறுப்பினர்தான் என்று கூற்வார்கள் போல)
-விக்கிப்பீடியா தமிழ்

நிலவியல்:
குமரிக்கண்டம் இருந்த இடங்களில் கடலின் ஆழம் 200-2000 அடிகள்.
இப்படி ஆழம் குறைந்து இருப்பதால் கண்டம் ஒன்று இருந்திருக்கும். 
200-2000 அடி ஆழம் குறைவு என்று கூறினால் இவருக்கு எப்படி விளங்கப்படுத்துவது? வீடு மனைகள் எல்லாம் ஏற்கனவே நீருக்குள்தான் இருந்ததா அல்லது கடல் மட்டம் 200-2000 அடி உயர்ந்துவிட்டது என்று கூறப்போகிறார்களா? 


பெயரியல் மற்றும் மொழியியல் சான்றுகள்:

1. சுமேரிய மொழியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்ட வாக்கியமான "கி ரி அ கி பட் டு ரி யா" என்ற வாக்கியமே "குமரிக்கண்டம்" ஆகும். (என்னை காப்பாத்துங்க...!!)
இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு "க ரி ய ர வ ன ட" ஆகும். இதன்படி சுமேரிய நாகரிகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே குமரிக்கண்டம் என்ற வார்த்தை இருந்ததை அறியலாம். (டேய் கொன்னுருவேன் ஓடிப்போயிரு என்று நீங்க சொல்றது என் காதில் விழுகிறது...)

உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ளது- பிரித்தானியக் கலைக்களஞ்சியம் சொன்னது....
சுமேரியண்ட அப்பன் பாட்டன் எல்லாம் தமிழன்தான் - நம்மாளு சொன்னது....

2. கடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் கூட தென்படுகின்றன.- யார்ரா இவனுகளுக்கு சீனா பாஷை சொல்லிகொடுத்தது....
பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான் - அப்படி மெதுவா பேசுங்க....

3. முருகனுக்கு இன்னொரு பெயர் குமரன். அவர்ட wife குமரி. So குமரிக்கண்டம். 

"வாட் எ கருவாட்"

4. இலெமூரியா = இலை (வம்சம்) + முரி (முரிந்த,அழிந்த)
அஃதாவது முரிந்த வம்சம் வாழ்ந்த இடம். 

ஆராய்ச்சியாளர் Lemur குரங்கினால்தான் அந்த பெயரை வைத்ததாக சொன்னாலும் நான் நம்பமாட்டேன். இலெமூரியா என்பதின் பெயர் மூலம் தமிழென்பதற்கு மேலுள்ள பெயர்த்திரிபே சான்று.

(உண்மையிலேயே அழுவதா சிரிப்பதா என விளங்குதில்லை)

இந்த பெயரியல் விளக்கங்கள் நகைச்சுவைக்காக சேர்க்கப்படசில்லை. உண்மையிலேயே தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து 10 மார்ச் 2016 இல் எடுக்கப்பட்டது. இதை ஒருவர் விக்கிப்பீடியாவுக்கு இடுகை செய்துள்ளார். 

இன்னும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னரேயே தமிழன் வாழ்ந்தான் என்று பதிவிட ஆரம்பித்து விட்டனர். (டைனோசோர் அழிந்தது 65 மில்லியன் வருடங்களுக்கு முன்) இப்படிப்போனால் தமிழன் குமரிக்கண்டத்தில் எருமை மாட்டுக்கு பதில் டைனோசரை பூட்டி ஆர்ஜெண்டீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை விவசாயம் செய்தான் என்று கூறுவார்கள். ஜல்லிக்கட்டும் டைனோசரோடுதான் என்று சொன்னாலும் வியப்படைய வேண்டாம்



லெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்றா? 
இதிலிருந்து தெளிவாவது லெமூரியா என்ற கைவிடப்பட்ட கொள்கைக்கும் சிலப்பைகாரத்திலும் இன்னும் சில காப்பியங்களிலும் வரும் குமரிக்கண்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 


முடிவுரை:
தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்துவதற்கு பொய்களையும் கற்பனைகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் துணைக்கழைத்தால் தமிழின் உண்மையான சிறப்பும் மற்றவர்களால் களங்கப்படுத்தப்படும்.

தமிழ் மொழியின் சிறப்புக்கும் தொன்மைக்கும் எழுதப்பட்ட அதன் பழங்கால இலக்கியங்களும் அதன் சொற்செழுமையுமே போதுமானது. கற்பனைக்கதைகளைக் கூறி அதைக் களங்கப்படுத்தி விடாதீர்கள். அது உங்கள் தாய் மொழிக்கு நீங்கள் செய்யும் துரோகம். 

(குறைகள் குற்றங்கள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். சொற் குற்றம் பொருட் குற்றம் எதுவாகிலும்)

4 comments:

  1. http://en.bab.la/forum/what-meaning-pandian-chinese-language-meant-occupied-land-75936

    ReplyDelete
  2. நீ சொல்லுறதப்பாத்த ஆரிய பாப்பான் சொல்லுற மாதிரி இருக்கு. உன்ன எப்படி அசிங்கமா திட்டலாம்ன்னு யோசிக்கிறேன்.. தமிழ அரை குரையா புரிஞ்சிகிட்டு பேசுர பாத்தியா.. அப்பொ கீழடி நோண்டச்சொல்லு... தமிழோட கல்வெட்டையும், மகாபலிபுரம் சுற்றளவு இருக்குற கல்லை எல்லாத்தையும் carbon dadting பண்ண விட்ட போதும். நீ மேல பேசுன அவ்வளவையும் பாத்தா கண்டிப்பா பாப்பானா இருப்பன்னு நான் நெனக்குறேன்.... ஒருவேளை நீ பாப்பானா இருந்தா,,, ஏன்னான்னு கேட்ப mail comunicate pannu det@il pasalam seenusp100@gamil.com..

    ReplyDelete
  3. தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்துவதற்கு பொய்களையும் கற்பனைகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் துணைக்கழைத்தால் தமிழின் உண்மையான சிறப்பும் மற்றவர்களால் களங்கப்படுத்தப்படும். அறிவுகெட்ட மூதேவி, கம்மணாட்டி Ni pottta comments ahhhla thannnda உன்ன திட்டுறேன்..

    ReplyDelete
  4. குறைகள் குற்றங்கள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டுங்கள். சொற் குற்றம் பொருட் குற்றம் எதுவாகிலும்) top to bottom asingama articals pottu vachierukaa ni sonnna வொவ்வொன்னுதுக்கும் என்கிட்ட book eruku da மண்டப்பையல..... தமிழன் நூலகம், லெமூரியான்னு website open panni vachierukaa?! சொன்னப்பையலலலல...

    ReplyDelete