Saturday, March 5, 2016

இந்திய இலங்கை பிரிவினைவாதங்கள்

பிரிவினைவாதம், சுதந்திர(?) போராட்டம். 

 







விரும்பாதவர்களை ஏன் ஆட்சி செய்ய வேண்டும். இந்தக்காஷ்மீரை போய்த்தொலை என்று விட்டிருந்தால் இன்று இந்தியா வல்லரசாகியிருக்கும். 

ஏலவே அதிகமான இளம் ராணுவ வீரர்களை பலிகொடுத்தாயிற்று. இன்னும் எத்தனை பேரை அந்தக்கடுங்குளிரிலும் பனியிலும் பலி கொடுப்பது? இன்னும் எத்தனை இளம்பெண்களை விதவைகளாக்குவது? இருதரப்பும் நிறுத்தப்போவதில்லை என்றால் இது இப்படியே தொடர்ந்தால் யாருக்கு லாபம்?

காஷ்மீரை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் இதை வைத்துக்கொண்டு மதவாத அரசியல் நடத்தும் சுயநலவாத அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள். 

காஷ்மீர், ஈழம் போன்ற பிரச்னை உள்ள இடங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 

மலேஷியா சிங்கப்பூரை உதறியது.... இன்று மலேசியா ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்து வருகிறது. இரு நாடுகளும் நல்லுறவையும் பேணுகின்றன. இந்திய இலங்கை மத்திய அரசுகளுக்கு இது ஓர் நல்ல உதாரணம்.

ஆனால் ஒரு விடயம். காஷ்மீரை கொடுக்க முன் பங்களாதேஷ் போன்று அதை நட்பு நாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் (கஷ்டம்தான் ஆனாலும் வெள்ளைக்காரனிடம் இந்த பிரித்தாளும் தந்திரத்தை கற்றுக்கொள்ளலாம்)
 
இதை இந்தியாவும் இலங்கையும் உணர்ந்து அன்றே செய்திருந்தால் இன்று இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்திகளாகி இருக்கும். 
சிங்கப்பூர் மலேசிய ஆட்சியாளர்கள் எழுபதுகளில் இலங்கையின் வளர்ச்சி உள்நாட்டுக்கட்டமைப்பை பார்த்து பாடம் கற்றார்கள். ஆனால் முப்பது வருடகால யுத்தம் இலங்கை அரசுக்கு கொடுத்தது என்ன? தமிழர்களுக்க்கு கொடுத்தது என்ன?

No comments:

Post a Comment