Sunday, March 6, 2016

பெண்ணியம் (feminism): இலகு தமிழில்

பெண்ணியம் (feminism): இலகு தமிழில்



நீங்கள் எங்கு பார்த்தாலும் பெண்ணியம் பற்றி புரிந்து கொள்ள முடியாத அதிமேதாவித் தனமான கட்டுரைகளே நிறைந்திருக்கும். இதற்குக்காரணம் இதை எழுதும் பெரும்பாலோர் ஊடகவியலாளர்கள். அது சரி ஊடகவியலாளர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?
இருவரும் கற்றது ஒரே பாசறையில்தான்(கட்டுரையை வாசிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்).

விடயத்துக்கு வருவோம்.
இது எங்கே யாரால் எப்போது எதற்காக துவங்கப்பட்டது?
விடைகள் ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்தது.

விடைகள்:

யாரால்: 
பெண்களால் என்று சொல்லப்படும். அது உண்மைக்கு பூசப்பட்ட பொய் முலாம். ஒரு ஆண்களின் கூட்டம் பின்னாலிருந்து சில பெண்களை இயக்கியது என்பதே உண்மை.

எங்கே: 
கீழைத்தேய நாடுகளில்தான் பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது. ஆகவே இங்கேதான் துவங்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது மேற்குலகில் உருவானது.
அது அந்தக்காலத்தில் மேற்குலகிலும் பெண்களுக்கு உரிமை இருக்கவில்லை என்று நீங்கள் கருதினால் அதுவும் தவறு ஏனென்றால் அடுத்த கேள்விகளை பாருங்கள்.

எப்போது:
புதிய உலக ஒழுங்கின் ஆரம்ப காலம் (18ம் நூற்றாண்டுக்கு பின்னர்)

எதற்காக: 
பாரிய இலக்குகளை வைத்திருந்தார்கள். இந்த இலக்குகளுக்காக இவர்கள் பயன்படுத்தும் பல நூற்றுக்கணக்கான வழிகளில் ஒன்றுதான் இந்த பெண்ணியம்.
இவர்களின் பிரதான இலக்கு- காலணித்துவ யுகத்திற்கு பிறகு நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கிய பின்பும் உலகை மறைமுகமாக ஆட்சி செய்வது. எப்படியென்று யோசிக்கிறீர்களா?

ஆட்சி செய்வதன் நோக்கம் தாம் சரியெனக் கருதும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. காலணித்துவக் காலத்தில் காலணித்துவ நாடுகளின் கொள்கைகள் சட்டமாக இருக்கும். சுதந்திரத்துக்கு பின் சுதேச சட்டங்கள் தானே வர வேண்டும்? 
ஆனால் விரும்பமாட்டார்கள். காலணித்துவ சட்டத்தையே அடிமை நாடுகள் சுதந்திரத்துக்கு பிறகும் பின்பற்ற வைத்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு. அது மறைமுக ஆட்சி. (இந்தியாவின் சட்டத்தை இய்ற்றிய அம்பேத்கார் எங்கே கல்வி கற்றவர்? புரிகிறதா?)

அவர்களின் பிரதான இலக்கு உலகை படைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்ற கொள்கையை நம்பாத ஒரு மிகப்பெரும் சமுதாயத்தை (Godless world) உருவாக்குவதே. இதில் மதங்களில் தீமையாக கூறப்பட்ட பெரும்பாலான விடயங்கள் ஆகுமாக்கப்படும். 

Eg: 
விபச்சாரம், தன்னினச்சேர்க்கை,  என்பது உரிமையாகவும்
கொலை என்பது மரண தண்டனை வழங்கக்கூடிய குற்றமில்லை என்றும்
பாலியல் பலாத்காரம் சிறிய குற்றம் என்றும்
குற்றவாளிகளை எல்லா வசதிகளையும் கொடுத்து பராமரிப்பதும்
இன்னும் மற்றும் அனைத்து குற்றங்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சில வேளை சில குற்றங்களை எதிர்ப்பது போல் நடிப்பார்கள். ஆனால் அந்தக்குற்றத்துக்கு தேவையான அனைத்து சூழலையும் ஏற்படுத்துவார்கள். துப்பாக்கிக்கு அனுமதி வழங்கிவிட்டு கொலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதை போல.

குற்றங்களை அதிகரிக்கச்செய்ய சூழலை மாற்ற வேண்டும்.
•மது பாவனை அதிகரிக்க வேண்டும். (ஆண்களை ஏற்கனவே சீரழித்தாயிற்று) 
•பெண்களும் மது அருந்த வேண்டும் (பெண்சமத்துவம்)
•விபச்சாரத்திற்கான தூண்டல்கள் பார்க்குமிடமெல்லாம் இருக்க வேண்டும்
•பெண்களின் மர்ம உறுப்புகள் நேரடியாகவோ இறுக்கமான ஆடைகள் மூலமாகவோ வெளித்தெரிய வேண்டும் (பெண்ணுரிமை)
•பெண்கள் ஆண்களுடன் சகஜமாக கட்டி உறவாட வேண்டும் (பெண்சமத்துவம், சினிமா நடிகர் நடிகைகளை கொண்டு இதை அடைவார்கள். இப்போது அரசியல்வாதிகள் கூட முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள்)
•Pornography என்பது தனிமனித உரிமை என்பார்கள். தடை செய்யும் அரசை மீடியாவின் உதவியுடன் வீழ்த்துவார்கள்.
•ஆயுதப்பாவனையை அதிகரிப்பார்கள்


ஆண்களுக்கு மத்தியில் இவற்றை பரப்புவது எளிதாக இருந்தது. ஆனால் பெண்கள் பின்வாங்கினர். அதற்கான காரணம் அந்தந்த கலச்சாரங்களில் இருந்த ஒழுக்க விழுமியங்களை அவர்களில் அதிகமானோர் பின்பற்றினர். இதை பெண்களிடத்தில் நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் பெண்களையே இதில் பிரச்சாரகர்களாக்க வேண்டும் என அறிந்து கொண்டு பெண்ணுரிமை இயக்கங்களை துவங்கினார்கள். 
சினிமாவை துணைக்கு அழைத்தார்கள். சினிமாவை Porn என்றும் சாதாரண சினிமா என்றும் இரண்டாக பிரித்து சாதாரண சினிமாவில் வரும் ஆபாசங்கள் porn அல்ல கலைத்துவம் என்று கூறி மக்களை நம்பச்செய்து. சினிமாவில் நிர்வாணமாக நடிப்பது நடிப்பாற்றலின் உச்சக்கட்டம் என்று சொல்லி விருதுவழங்க ஆரம்பித்தார்கள். அந்த விருதுகளின் பெருமைகளை அவர்களின் மீடியாக்கள் பேசிக்கொண்டிருக்கும்.

சினிமா நடிகர் நடிகைகள் ஆடைக்குறைப்பு செய்வது Fashion என்று பறைசாற்றுவார்கள். முறைதவறிய காமத்தை திரையில் காட்டி அவர்களின் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள். எந்த நடிகர் நடிகைகளாவது ஒழுக்கம்(?) அது இது என்று பேசினால் சில நாட்களில் அவர் மீடியாக்களால் கண்டுகொள்ளப்படமாட்டார். மார்கெட் இழந்தவர் என்று ஓரங்கட்டப்படுவார்.

அழகு ராணிப்போட்டிகள் நடத்தி இறுக்கமான கலாச்சாரம் உள்ள நாடுகளில் பிகினியை மேல்தட்டு மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாக்குவார்கள். நோக்கத்தை அடைந்துவிட்டால் அந்த நாட்டு அழகிகளை பின்னர் கண்டுகொள்ள மாட்டார்கள். (அழகிகள் முடிந்து விட்டார்களோ)

பெண்ணுரிமையையும் Journalism ஐயும் ஒரே பாசறையில் கற்றுக்கொடுப்பார்கள். ஆகவே பெண்ணுரிமை என்ற பெயரில் கீழைத்தேய கலாச்சாரங்கள் அவமதிக்கப்பட்டு இவை காலத்துக்குதவாதவை என்று தீவிரமாக பிரச்சாரம் செய்யப்படும். நோபல் பரிசுகள், விருதுகள் வழங்கப்படும். 

முதலில் சாதாரண Ladies club ஆக ஆரம்பிக்கப்பட்டு சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவார்கள்(நல்ல விடயம்). 
ஒரு நாள் திடீரென்று ஒரு மேலைத்தேய அல்லது அங்கு கல்வி பெற்ற கீழைத்தேய பெண்களை Chief guest ஆக கூட்டிவருவார்கள். அவர்கள் சாதாரணமாக மது அருந்துவார்கள் அசால்ட்டாக சிகரட் புகைப்பார்கள். கொடுத்தால் தவிர்ப்பது நாகரீகம் இல்லை என்பார்கள். இதில் சில பெண்கள் கவரப்படுவார்கள்.
இவ்வாறு விஷ விதைகள் விதைக்கப்படும்.
இப்படிப்பார்த்தால் முன்னர் இருந்த பாரத நாடு ஒரு நாகரீகம் அறிந்திராத காட்டுமிராண்டிகளின் கூடாரம். கழிசடைகளின் கழிவறை. ஆனால் இவற்றை நேரடியாகக் கூறமாட்டார்கள் ஏனென்றால் மக்கள் பின்னியெடுத்து விடுவார்கள் என்று தெரியும். 

இவ்வாறு கவரப்பட்ட அந்த சில பெண்கள் பின்னர் தலைமைப்பொறுப்புக்கு வருவார்கள். விபச்சாரிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அசிங்கங்களை இவை "அசிங்கம்" இல்லை என்பார்கள். ஏனென்றால் இவர்களின் குருநாதர்களின் "அசிங்கத்துக்கான" வரைவிலக்கணம் வேறு. 

ஓரினச்சேர்க்கை பாலினமாற்றம் என்பன பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படுகிறது அவற்றை மாற்றக்கூடாது என்று அரைகுறை விஞ்ஞானம் பேசுவார்கள் (இது பற்றிய விஞ்ஞானக் கட்டுரை பின்னர் எழுதுகிறேன்). 
குற்றம் செய்பவன் கூட அடக்கமுடியாத கோபத்துக்கான பரம்பரை இயல்புகளை கொண்டிருப்பவன்தான் அதற்காக குற்றம் செய்வது அவன் உரிமை என்று கூறுவதில்லை. இவ்வகையான பரம்பரை அலகுகள் (Polygenic) புறச்சூழல் காரணிகளால் (External environmental influences) மாற்றப்படக்கூடியவை. இவற்றை அந்தந்த கலாச்சாரங்களும் நாகரீகங்களும் தீர்மானிக்கும். இந்தியாவில் கூட திராவிடர் கலாச்சாரம் பல்வேறு வழிகளில் ஆரியர்களின் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. 

இயற்கை சூழல் உடலமைப்பு கலாச்சாரம் மதம் என்பன இக்காரணிகள். இவற்றில் மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவது மதங்கள். இவர்களுக்குத்தான் மதங்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கை இருக்கிறதே இதற்காக இங்குள்ள மதங்கள் கூறும் ஒழுக்கங்களின் வரைவிலக்கணத்தை மாற்றத்தொடங்கினார்கள். 

இதற்கான ஏற்பாட்டில் ஒன்றுதான் பெண்ணியம் (Feminism). மேலோட்டமாக பார்த்தால் "அட சூப்பரு" என்று விஜய் டிவியின் ம.க.ப. ஆனந்த் போல கத்தத்தோன்றும். ஆனால் உள்நோக்கங்கள் நச்சு விதைகள். 

பெண்ணியம்தான் இறுதியாக நடந்த கலச்சரத்தாக்குதல் அல்ல... இன்றுவரை நடக்கும் ஜல்லிக்கட்டு தடை போன்றவையும் இவ்வகயான கலாச்சார (மற்றும் பொருளாதார) தாக்குதல்களே... (இது பற்றி தனி விளக்கம் உண்டு).

இந்த நவீன பெண்ணியவாதிகளை உருவாக்கியதில் சமூகங்களுக்கும் பங்குண்டு. மதங்களின் பெயரால் மதங்களுக்குள் நுழைந்த பிழையான சித்தாந்தங்களை கண்டறிந்து மதங்களை தூய்மைப்படுத்த அந்தந்த மதங்கள் தவறியதும் ஒரு காரணம் (மதங்களை தூய்மைப்படுத்த உண்மையில் புறப்பட்ட சிலரையும் மதவாதி, அடிப்படைவாதி என்று முத்திரை குத்துவதையும் செய்வார்கள் என்பது வேறு கதை). மற்றும் சில ஆண்களின் பெண்கள் மீதான கொடுமைகளுக்கு சட்டங்கள் தண்டனை வழங்க தவறியமை, போன்றவை....

இவற்றை மீடியாவின் உதவியுடன் இவை மட்டுமே நாட்டில் நடப்பதாக பிரச்சாரம் செய்து தங்கள் தேவையை சாதித்துக்கொண்டார்கள். 

இறுதியாக ஒரு உதாரணம்:

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை.
இவர்களாலேயே வளர்க்கப்பட்ட கமலாதாஸ் என்ற பெண்ணியவாதி (தன் பாலியல் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் Biography வெளியிட்டவர், தன்னையே நிர்வாணமாக வரைந்து கண்காட்சி நடத்துமளவுக்கு சென்றவர்) பின்னர் இஸ்லாம் சமயத்தில் இணைந்து கடுமையான ஆடைக்கட்டுப்பாடுகளை பேணத் தொடங்கினார். என்ன நடந்தது? நீங்கள் நினைப்பது சரி.
அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அதே பெண்களால் நிராகரிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். மீடியாக்களால் புறக்கணிக்கப்பட்டார். இவரைக் கொண்டாடிய சில மீடியாக்களே இவரை மனநிலை பிறழ்ந்தவர் என்று காட்ட முற்பட்டன. 


No comments:

Post a Comment