Saturday, March 5, 2016

திருட்டு விசிடி (Thiruttu VCD)



திருட்டு விசிடி ஒரு எளிய விளக்கம்

பாரம்பரிய திருட்டு விசிடி என்பது ஒரு திரைப்படத்தை அது சிடி ஆகவோ டிவிடி ஆகவோ உத்தியோகபூர்வமாக வெளிவருவதற்கு முன்னால் அதை தியேட்டர் ஸ்க்ரீனில் இருந்து கேமிராவில் காப்பி பண்ணி மொத்தமாகவும் சில்லரையாகவும் சிடி டிவிடிக்களில்(டிவிடி என்றாலும் பெயர் திருட்டு விசிடி தான்) விற்பார்கள். இலங்கைத் தியேட்டர்களில் போன் மூலம் வீடியோ எடுப்பது அவ்வளவு கடினமில்லையாம். ஏனெனில் இருப்பது சிங்கள போலீஸ் அவர்கள் தமிழர்கள் உள்விவகாரத்தில் தலையிடுவது குறைவு. ஆனாலும் மிக அதிகமான திருட்டு வீடியோக்கள் இந்தியாவில்தான் எடுக்கப்படுகின்றன. 

ஆனால் தற்போது இவற்றுடன் சேர்த்து (அதைவிட அதிகமாக) இண்டர்நெட்டில் அப்லோட் செய்து விடுவார்கள். அப்லோட் செய்பவர்களுக்கு இந்த வெப்சைட்டுக்கள் பணம் வழங்கும்.  இந்த வெப்சைட்டுக்களில் அதிகமான மிகப்பிரபலமானவை ஐரோப்பா மற்றும் கண்டாவில் வாழும் இலங்கைத்தமிழர்களால் நடத்தப்படுவதால் இந்திய அரசுக்கு இவற்றை கட்டுப்படுத்துவது தடைசெய்வதில் அதிகமான நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. 

திருட்டு விசிடிக்கள் குறிப்பாக சினிமாவை ரசிக்கும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தியேட்டர்களில் ரவுடிகளின், ஒழுக்கம் கெட்ட குடிமகன்களின், குடிக்காத வெறிமகன்களின் சேட்டைகளிலிருந்து தங்களை பாதுகாக்கவும், ஆண்களின் சீண்டல்களிலிருந்து பாதுகாக்கவும்... ஆபாச காட்சிகளின் போது தாங்கள் விசிலடித்து அருவருப்பாக ஓரக்கண்ணால் பார்க்கப்படுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

கேண்டீன் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளை பிடிக்காத நடுத்தர மற்றும் ஏழை மக்களும் தங்கள் வீடுகளிலேயே சாப்பிட்டுக்கொண்டு படத்தை பார்க்கலாம்.





(அப்படியென்றால் திரைப்படம் எடுத்த பண முதலைகளுக்கும் நடிகர்களுக்கும் நட்டம்தானே என்று நீங்கள் நினைத்தால்... ஐ யாம் சாரி... நீங்கள் வளர வேண்டும். அவனுகளெல்லாம் ஆல்ரெடி செட்டிலாகியிருப்பதே ஏழை மக்கள் பணத்தில் தான். அதுவும் தியேட்டரில் படம் பார்க்கும் ஏனையவர்களினது பணம் அவனுகளுக்கு போதும்)

அரசாங்க உதவித்தொகைகள் ஊக்குவிப்புகள் கிடைக்காத ஒரே தொழிலாளர்கள் திருட்டு வீசீடி உற்பத்தியாளர்களே. அவர்கள் உயிரைக்கொடுத்து வீடியோ பண்ணி ஏழை பாழைகளும் படம் பார்க்க உதவுகிறார்கள். 
இதில் ஒன்றும் பணக்கார முதலைகளான தயாரிப்பாளர்களினதோ நடிகர் நடிகையினதோ சொத்துக்கு பங்கம் ஏற்படாது. திருட்டு வீசீடி ஏழைகளின், நடுத்தர மக்களின், தியேட்டர் அசிங்கங்களை வெறுப்பவர்களின் அடிப்படை உரிமை. 
சில வெறித்தனமான ரசிகர்கள் சிந்திக்க வேண்டும். எத்தனை நூறுகளும் இருநூறுகளும் நீ உன் நடிகனுக்கும் தயாரிப்பாளனுக்கும் கொடுத்துள்ளாய். அவன் செட்டிலாகி விடுவான், உன் குடும்பம் சோத்துக்கு சிங்கி அடிக்கும். 

சில கலைச்சொற்கள்:
HDRip - மிகத்துல்லியமான வீடியோ 1080, 720 போன்றவை வீடியோவின் பிக்சல் சைஸ் நம்பர் கூடினால் துல்லியமும் கூடும்.
DVDRip - very good clear
Scr - தியேட்டரில் தெரியாமல் படம் பிடித்தது (ஓரிரு நாட்களுக்குள் வெளிவரும். ரசிகப்பெருமக்களின் கூச்சல்கள் விசில்கள் நிறைந்தது)

வாழ்க திருட்டு வீசீடி.... வளர்க அதன் புகழ்..... "அம்மா திருட்டு விசீடிக்கள்" ஆரம்பிக்கப்பட வேண்டும். 

இன்டர்நெட் பக்கேஜை போட்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு தேடுகிறோம். எத்தனை dead links.... "The file you are searching deleted due to violation of copyright" எண்டு எத்தனை அமெரிக்கத்தனமான மெசேஜ்கள். ஒரு வழியாக நல்ல வெப்சைட்டை கண்டுபிடித்தால் ஆயிரத்தெட்டு விளம்பரங்களும் PopUp களும் வந்து Screen ஐ நிறைக்கும் மிகப்பொற்மையாக close பண்ணனும். 

இதையும் தாண்டி டவுன்லோட் பண்ணி பார்த்தா அதுக்குள்ளே ரசிகப்பெருமக்களின் கூச்சல்கள் வேறு. ஷ்ஷ்ஷபா..... முடியல..... 😂

1 comment: