ஐக்கிய நாடுகள் சபை (United Nations) - ஒரு யதார்த்தப் பார்வை
ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து1945 இல் நாடுகளின் லீக் (League of Nations) என்ற அமைப்பை பிரதியிட்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமைச்செயலகம் அமெரிக்காவில் நியூயோர்க் சிட்டி (New York City) இல் உள்ளது.
எழுத்தில் உள்ள ஐநா வின் நோக்கங்கள் சமாதானம், பாதுகாப்பு, மனித உரிமை, சமூக பொருளாதார மேம்பாடு, சூழல் பாதுகாப்பு, பஞ்சம் யுத்த காலங்களில் மனிதாபிமான உதவிகள் போன்றவைகளாகும்.
ஆனால் இந்த அமைப்பு இன்று தன் நோக்கங்களிலிருந்து தடம் புரண்டு வேறு ஒரு பாதையில் பயணிப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஐநா வுக்கான நிதியுதவியில் 22% அமெரிக்காவிடமிருந்தே கிடைக்கிறது இதனால் அமெரிக்கா ஐநாவை தன் சொத்தாக, தனது தனிப்பட்ட நலன்களுக்கு பாவித்துக்கொண்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் உலக நலன்கள் புறக்கணிக்கப்பட்டு பல லட்சம் உயிரிழப்புகளுக்கு ஐநா துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐநா உருவாக்கப்பட்ட தனது இலக்குகளை அடைந்துள்ளதா அல்லது ஒரு சில நாடுகளின் சுயலாபங்களுக்கான வடிகாலாக அமைந்துள்ளதா?
~காஷ்மீரில் அரை நூற்றாண்டுக்கும் முந்தைய பிரச்சினை - ஐநாவால் வழங்கப்பட்ட "தங்களை யார் ஆளவேண்டும் என்று மக்களே தீர்மானிக்க வேண்டும்" என்ற முடிவை இந்தியா "அந்நிய தலையீடு" தேவையில்லை என்று கூறி தூக்கியெறிந்தது. ஐநா என்ன செய்தது?
~இலங்கையில் வடகிழக்கு மக்களின் இன்றைய நிலைக்கு ஐநா தலையீட்டை இலங்கை "அந்நிய தலையீடு" தேவையில்லை என்று கூறி நிராகரித்தது. இந்தியா இதை ஆதரித்தது. இலங்கைக்கு வழங்கப்படும் தீர்வில் தலையிட்டு காஷ்மீர் மக்கள் தங்களுக்கும் அந்தத்தீர்வு வேண்டும் என்று கேட்டு விட்டால் சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாகிவிடும். இதனால் இலங்கைக்கு ராணுவ பொருளாதார உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை அனைத்தையும் ஐநா பார்த்துக்கொண்டேயிருக்கிறது. திருடனிடமே குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை வழங்கியதை தவிர இலங்கையில் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு வழங்கியதா?
~அதே வேளை தென்சூடான், கிழக்குத்திமோர் போன்ற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் இஸ்லாமிய நாடுகளிலிருந்து நனிநாடு கேட்கும் போது மாத்திரம் அவசர அவசரமாக பிரித்துக்கொடுத்து சாதனைகளை நிலைநாட்டும். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாமல் விட்டதுதான் மற்ற தனிநாட்டு கோரிக்கையாளர்களின் தவறா?
~வியட்நாமை எந்த ஒரு காரணமுமின்றி கம்யூனிஸத்தை பின்பற்றிய ஒரே குற்றத்துக்காக பொய்க்காரணங்களை கூறி இழப்புக்களையும் பொருட்படுத்தாமல் துவம்சம் செய்ததையும் வேடிக்கைதானே பார்த்தது இந்த ஐநா.
~ஈராக்கில் பேரழிவு ஆயுதம் உண்டு என்று பொய்யான காரணத்தை கூறி ஐநாவின் எதிர்பையும் மீறி ஈராக்கை அழித்து நாசப்படுத்தி எண்ணைவளங்களை தங்கள் கம்பெனிகளுக்கு எடுத்துக்கொண்டு முடிவற்ற ஒரு உள்நாட்டு யுத்தத்தை மூட்டிவிட்டு பின்னர் பேரழிவு ஆயுதம் இருக்கவில்லை, தங்கள் உளவுத்துறை ஒரு சிறு தவறை செய்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியதையும் கையாலாகாதனத்துடன் வேடிக்கை பார்த்ததை தவிர இந்த ஐநா வேறு என்ன செய்தது?
~இஸ்ரேல் என்ற பேரழிவு அணு ஆயுதங்களை எந்த அணு ஆயுத ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் தயாரிக்கும் ஒரு நாட்டை எந்த ஒரு நிபந்தனையுமின்றி அமெரிக்கா பாதுகாப்பதுடன் மனித குலத்துக்கெதிராக குழந்தைகளை கொன்று குவித்து அந்த நாடு செய்யும் குற்றங்களையும் அமெரிக்கா தன் "வீட்டோ" ரத்ததிகாரத்தின் மூலம் பாதுகாப்பதை தடுக்க சக்தியற்று இருப்பதை விட இந்த ஐநா சாதித்தது என்ன?
~அமைதியாக இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு காரணமாக காட்டி அமெரிக்கா இன்று சுடுகாடாக்கிவிட்டிருக்கிறது. இதை தடுக்க ஐநா என்ன செய்தது?
~அம்மை நோயை முற்றிலுமாக அழித்து விட்டோம் என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உலக சுகாதாரஸ்தாபனம் அறிக்கை விடுவதற்கு காரணம் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் இந்த பேரழிவு வைரஸை குப்பிகளில் அடைத்து உயிரியல் ஆயுத உள்நோக்கத்துடன் பாதுகாக்கின்றன. இதை தடுக்கக்கூட ஐநாவால் முடியவில்லையே.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இருந்து திருடர்களையும் யுத்தவெறியர்களை பாதுகாப்பது அவசியம்தானா? வீட்டோ ரத்ததிகாரம் உள்ளவரை ஐநாவால் நடுநிலையாக இயங்கமுடியாது என்பதே நிதர்சனம்.
No comments:
Post a Comment