
தமிழன் நூலகம்
பலதரப்பட்ட விடயங்களும் எந்தப்பக்கமும் சாயாமல் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டாமல், புதிதாய் நோக்கப்படும். உங்களுக்கு எதைப்பற்றியாவது தெளிவு வேண்டுமென்றாலும் எழுதி அனுப்பலாம். அறிவியல் விஞ்ஞானம் பொது விடயம், மொழியியல், மதங்கள் மற்றும் சமயங்கள் அரசியல்.... எதுவாகினும். எனக்கு விடை தெரியாவிட்டால் தெரியாது என்று கூறிவிடுவேன்.
Thursday, September 29, 2016
மக்கள் பணத்தை திருடியவனுக்கு ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் கையை வெட்டி தண்டனை (IslamicPunishments)

Thursday, September 22, 2016
ஈழத்தமிழர் காஷ்மீர் சகோதர விடுதலைக்காக (TamilsForKashmir)
Tuesday, September 20, 2016
மனுஸ்மிருதி (Manusmriti)
Wednesday, August 17, 2016
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு (காவி வெறியர்கள் படிக்க வேண்டாம்)
Monday, August 15, 2016
இந்திய தமிழர்களின் உண்மையான தொப்புள்கொடி உறவுகள் யார்? Sri Lankan Estate Tamils
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் மலையகத்தமிழர்களே அன்றி யாழ்ப்பாண உயர்சாதிகள் அல்ல. யாழ்ப்பாண தமிழர்கள் சித்தி, சித்தப்பாவின் பிள்ளைகள் போன்று. ஆனால் சாதி அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறான போராட்டங்கள் மூலம் இலங்கையில் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்தியத்தமிழர்களை மறைத்துவிட்டார்கள்.
நூற்றாண்டுகளாக அடிமைகள் போன்று இலங்கை அரசாலும் யாழ்ப்பாணத்தமிழர்களாலும் ஆளப்படும் இந்திய தோட்டத்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களின் வீடுகளிலும் கொழும்பிலுள்ள அவர்களின் வர்த்தக நிலையங்களிலும் அடிமை சேவகம் பார்த்து வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்தியத்தொழிலாளர்களின் சனத்தொகை இன்று இலங்கை தமிழர்களின் சனத்தொகையை கடந்து சென்றுகொண்டிருப்பது இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.
என்றாலும் புலிகளின் அடிவருடிகளாக செயல்படும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ வேண்டுமென்றே போராட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறார்கள் என்பதே உண்மை.
பாலியல் தொழில் (Prostitution)
பாலியல் தொழில், வேசித்தொழில், தேவடியாள் தொழில் (இந்த சொல்லின் பாவனை கிராமப்புற தமிழில் அதிகம்), உடம்பை விற்றல் இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த தொழில் திருமணம் செய்யாமல் அல்லது திருமணத்துக்கு புறம்பாக ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவதை குறிக்கும். சம்பளத்தை பொறுத்து பாலியல் தொழில், சின்னத்திரை நடிகை, சினிமா நடிகை என்று பெயர்கள் வேறுபடும். எல்லோரும் செய்வது ஆணின் உடம்பை கட்டிப்பிடிப்பதற்கு பணம் பெறுவதே.
இந்த தொழிலில் விரும்பி இணையும் பெண்கள் அதிகம். இவர்கள் தன் வருமானத்துக்காக பொது இடங்களில் பிச்சையெடுப்பதை கேவலமாக நினைத்து இந்த "தொழிலில்" இணைகின்றார்கள். (இந்த இடத்தில் பிச்சையெடுத்தால் கூட எடுப்பேனே தவிர வேசித்தொழில் செய்யமாட்டேன் என்று வாழும் பிச்சைக்கார பெண்களை பாராட்டியே ஆகவேண்டும். கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுவதும் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
இது இவ்வாறு இருக்க சில உலகின் கேவலமான கலாச்சாரத்தை கொண்ட ஒரு சில நாட்டு அரசுகளே உயிரினும் மேலாக கண்ணியமாக மதிக்க வேண்டிய தன் நாட்டு பெண்களை, தாய்க்குலத்தின் சதையை காம வெறிகொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆண்களுக்கும் விற்று பணம் சம்பாதிக்கும் உத்தியோகபூர்வமான வேசித்தனமும் நடைபெறுகிறது.
இப்போது இந்தியாவும் முன்னரைவிட இத்தொழிலில் தாய்லாந்தை பார்த்து "முன்னேறி" வருகிறது. மும்பையில் உள்ளது போன்று ஏனைய இடங்களிலும் இந்த தேவடியாள் தொழில் சிறக்க வேண்டுமாம்.
எத்தனை பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் இதனால் சீரழிகின்றன. பாலியல் நோய்கள் ஏற்பட்டு வயதானபின் மனநோய் ஏற்பட்டு "கஸ்டமர்" இல்லாமல் அந்த பெண்கள் ஓரங்கட்டப்பட்டு பித்துப்பிடித்து அலையும் காட்சிகள். இவற்றை இந்த நாட்டு அரசுகள் சிந்திப்பதில்லை.
தாய்லாந்தில் பௌத்த மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.
இந்தியாவில் இந்து மதத்தால் இதை நிறுத்த முடியவில்லை.
ஐரோப்பாவில் கிறிஸ்தவ யூத மதங்கள் இதை நிறுத்துவதில்லை என்பது போக அதற்கும் மேலே ஒரு படி போய் அப்பா அங்கிள் கேம் என்ற ஓரினப்புணர்ச்சியையுமல்லவா (Homosexual) ஆதரிக்கிறது.
மனிதனை ஒழுக்க ரீதியாக நல்வழிப்படுத்த முடியாத மதங்கள் இருந்தென்ன பயன்? இதைத்தானே பகுத்தறிவு தந்தை பெரியார் ஈவேரா வும் கேட்டார்.
மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.
Wednesday, July 13, 2016
ஐக்கிய நாடுகள் சபை (United Nations) - ஒரு யதார்த்தப் பார்வை
ஐக்கிய நாடுகள் சபை (United Nations) - ஒரு யதார்த்தப் பார்வை
ஐக்கிய நாடுகள் சபை இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து1945 இல் நாடுகளின் லீக் (League of Nations) என்ற அமைப்பை பிரதியிட்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமைச்செயலகம் அமெரிக்காவில் நியூயோர்க் சிட்டி (New York City) இல் உள்ளது.
எழுத்தில் உள்ள ஐநா வின் நோக்கங்கள் சமாதானம், பாதுகாப்பு, மனித உரிமை, சமூக பொருளாதார மேம்பாடு, சூழல் பாதுகாப்பு, பஞ்சம் யுத்த காலங்களில் மனிதாபிமான உதவிகள் போன்றவைகளாகும்.
ஆனால் இந்த அமைப்பு இன்று தன் நோக்கங்களிலிருந்து தடம் புரண்டு வேறு ஒரு பாதையில் பயணிப்பதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஐநா வுக்கான நிதியுதவியில் 22% அமெரிக்காவிடமிருந்தே கிடைக்கிறது இதனால் அமெரிக்கா ஐநாவை தன் சொத்தாக, தனது தனிப்பட்ட நலன்களுக்கு பாவித்துக்கொண்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் உலக நலன்கள் புறக்கணிக்கப்பட்டு பல லட்சம் உயிரிழப்புகளுக்கு ஐநா துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐநா உருவாக்கப்பட்ட தனது இலக்குகளை அடைந்துள்ளதா அல்லது ஒரு சில நாடுகளின் சுயலாபங்களுக்கான வடிகாலாக அமைந்துள்ளதா?
~காஷ்மீரில் அரை நூற்றாண்டுக்கும் முந்தைய பிரச்சினை - ஐநாவால் வழங்கப்பட்ட "தங்களை யார் ஆளவேண்டும் என்று மக்களே தீர்மானிக்க வேண்டும்" என்ற முடிவை இந்தியா "அந்நிய தலையீடு" தேவையில்லை என்று கூறி தூக்கியெறிந்தது. ஐநா என்ன செய்தது?
~இலங்கையில் வடகிழக்கு மக்களின் இன்றைய நிலைக்கு ஐநா தலையீட்டை இலங்கை "அந்நிய தலையீடு" தேவையில்லை என்று கூறி நிராகரித்தது. இந்தியா இதை ஆதரித்தது. இலங்கைக்கு வழங்கப்படும் தீர்வில் தலையிட்டு காஷ்மீர் மக்கள் தங்களுக்கும் அந்தத்தீர்வு வேண்டும் என்று கேட்டு விட்டால் சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாகிவிடும். இதனால் இலங்கைக்கு ராணுவ பொருளாதார உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை அனைத்தையும் ஐநா பார்த்துக்கொண்டேயிருக்கிறது. திருடனிடமே குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை வழங்கியதை தவிர இலங்கையில் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு வழங்கியதா?
~அதே வேளை தென்சூடான், கிழக்குத்திமோர் போன்ற கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் இஸ்லாமிய நாடுகளிலிருந்து நனிநாடு கேட்கும் போது மாத்திரம் அவசர அவசரமாக பிரித்துக்கொடுத்து சாதனைகளை நிலைநாட்டும். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றாமல் விட்டதுதான் மற்ற தனிநாட்டு கோரிக்கையாளர்களின் தவறா?
~வியட்நாமை எந்த ஒரு காரணமுமின்றி கம்யூனிஸத்தை பின்பற்றிய ஒரே குற்றத்துக்காக பொய்க்காரணங்களை கூறி இழப்புக்களையும் பொருட்படுத்தாமல் துவம்சம் செய்ததையும் வேடிக்கைதானே பார்த்தது இந்த ஐநா.
~ஈராக்கில் பேரழிவு ஆயுதம் உண்டு என்று பொய்யான காரணத்தை கூறி ஐநாவின் எதிர்பையும் மீறி ஈராக்கை அழித்து நாசப்படுத்தி எண்ணைவளங்களை தங்கள் கம்பெனிகளுக்கு எடுத்துக்கொண்டு முடிவற்ற ஒரு உள்நாட்டு யுத்தத்தை மூட்டிவிட்டு பின்னர் பேரழிவு ஆயுதம் இருக்கவில்லை, தங்கள் உளவுத்துறை ஒரு சிறு தவறை செய்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியதையும் கையாலாகாதனத்துடன் வேடிக்கை பார்த்ததை தவிர இந்த ஐநா வேறு என்ன செய்தது?
~இஸ்ரேல் என்ற பேரழிவு அணு ஆயுதங்களை எந்த அணு ஆயுத ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடாமல் தயாரிக்கும் ஒரு நாட்டை எந்த ஒரு நிபந்தனையுமின்றி அமெரிக்கா பாதுகாப்பதுடன் மனித குலத்துக்கெதிராக குழந்தைகளை கொன்று குவித்து அந்த நாடு செய்யும் குற்றங்களையும் அமெரிக்கா தன் "வீட்டோ" ரத்ததிகாரத்தின் மூலம் பாதுகாப்பதை தடுக்க சக்தியற்று இருப்பதை விட இந்த ஐநா சாதித்தது என்ன?
~அமைதியாக இருந்த ஆப்கானிஸ்தானை அமெரிக்க இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு காரணமாக காட்டி அமெரிக்கா இன்று சுடுகாடாக்கிவிட்டிருக்கிறது. இதை தடுக்க ஐநா என்ன செய்தது?
~அம்மை நோயை முற்றிலுமாக அழித்து விட்டோம் என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் உலக சுகாதாரஸ்தாபனம் அறிக்கை விடுவதற்கு காரணம் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் இந்த பேரழிவு வைரஸை குப்பிகளில் அடைத்து உயிரியல் ஆயுத உள்நோக்கத்துடன் பாதுகாக்கின்றன. இதை தடுக்கக்கூட ஐநாவால் முடியவில்லையே.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இருந்து திருடர்களையும் யுத்தவெறியர்களை பாதுகாப்பது அவசியம்தானா? வீட்டோ ரத்ததிகாரம் உள்ளவரை ஐநாவால் நடுநிலையாக இயங்கமுடியாது என்பதே நிதர்சனம்.