Wednesday, August 17, 2016

காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு (காவி வெறியர்கள் படிக்க வேண்டாம்)

Kashmir dispute

மக்களே ராணுவத்தை கல்லெறிந்து விரட்டும்போது எதற்காக இந்த காஷ்மீர் பிரச்சினை?


போய்த்தொலை என்று விடப்பட்டிருக்க வேண்டிய உதவாக்கரைகள் வாழும் ஒரு நிலப்பகுதியை கைக்குள் வைத்துக்கொள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை லட்சம் கோடிகள் மக்கள் பணம், எத்தனை படைவீரர்களின் உயிர்கள், எத்தனை விதவைகள்.... எதற்கு இந்த வீராப்பு? எந்த ஒரு ராணுவமும் தன் உயிர் இழப்புக்களை குறைத்தே காட்டும். உண்மையில் எத்தனை பேர்களை கொன்றார்களோ தெரியாது...

தீர்மானம் எடுப்பவர்கள் எல்லோரும் பணக்கார அரசியல்வாதிகள். அவர்களுக்கு யுத்தமும் வேண்டும் காஷ்மீரும் வேண்டும். ஆனால் அவர்களின் பிள்ளைகள் யாரும் காஷ்மீரில் ராணுவத்தில் சேர்ந்து போரில் நேரடியாக ஈடுபடமாட்டார்கள். 

வடகிழக்கு மாநிலங்களில் கற்பழிப்புகள் நடாத்துவோம், அவர்களை மாற்றாந்தாய் பிள்ளை போல் பார்ப்போம். போலீஸ் பாதுகாப்பில் மசூதியை உடைப்போம், உடைத்த மசூதியையும் கட்டிக்கொடுக்கவும் மாட்டோம். தீவிரவாதத்தை வெறுக்கும்படி அந்த இளைஞர்களை கேட்போம். நடக்குமா இதெல்லாம்?

இங்கே பேஸ்புக்கில் இருந்து கொண்டு சில காவி வெறியர்கள் வீர வசனம் பேசுவர். "சண்டைக்கு வாடா, கொண்ணுடுவேன்.. கிழிச்சுடுவேன், மேப்பிலிருந்தே தூக்கிடுவேன், ஐயாம் வெய்டிங்க்" எண்டெல்லாம் பாகிஸ்தானிடம் பஞ்ச் டயலாக் பேசும் ஆனால் வந்து ராணுவத்தில் சேரு எண்டு சொன்னால் "வீட்டில விடமாட்டாங்க பாஸ்" எண்டு ஜகா வாங்கிடும். 

காஷ்மீரிகளிடம் கல்லடி வாங்கும் நிலைக்கு இந்திய ராணுவம் தள்ளப்பட்டிருப்பது அதர்மம். 

ஒரே தீர்வு... பிரச்னையை விட்டு ஒதுங்குங்கள். மீதமாகும் பல பில்லியன் கோடி பணத்தில் முழு இந்தியாவின் வாழ்க்கைத்தரத்தையும் வெகுவாக உயர்த்தி மிகப்பெரிய முன்னேற்றமடைந்த நாடாக மாற்ற முடியும். இந்த முஸ்லிம்கள் வசிக்கும் காஷ்மீர் இந்திய வளர்ச்சியின் தடைக்கல்லாக இருக்கும் என்பதை அறிந்தே வெள்ளைக்காரன் அதை பாகிஸ்தானுடன் சேர்க்காமல் விட்டுவிட்டு சென்றான். எத்தனை காலம்தான் விரும்பாதவர்களை அடக்கி ஆட்சி செய்ய முடியும்?

பாகிஸ்தானுடன் இருந்த பங்களாதேஷ் இன்று இந்தியாவின் நண்பன். காஷ்மீரை மேலும் மேலும் ரத்தக்களரியாக்கி அதற்காக முடிவில்லாமல் பெறுமதியான இந்திய ராணுவ வீரர்களின் உயிர்களை பலி கொடுப்பதை விட காஷ்மீரை இந்தியாவுக்கு ஆதரவான ஒரு நட்பு நாடாக மாற்றி ஐநாவில் இன்னுமோர் ஆதரவுடன் மேல் நோக்கிச்செல்வது இந்தியாவின் வல்லரசு கனவை நனவாக்கும்.

இப்போதே இந்தியா சார்பான ஒரு நாட்டை இந்தியாவே உருவாக்கினால், போராட்டம் மூலம் அல்லது அந்நிய தலையீடுகள் மூலம் நாடு உருவாகி அது பாகிஸ்தானின் நட்பு நாடாக வருவதை தடுக்கலாம். இப்போது உள்ள ஆட்சிக்கு உதவி செய்து காஷ்மீரை நட்பு நாடாக்கி கொள்வதே இந்த முடிவற்ற காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவுக்கு சாதகமாக தீர்த்து கொள்ளும் சிறந்த ராஜதந்திர வழி.

நடு நிலையாக சிந்தித்து கமெண்ட் போடுங்கள்.

No comments:

Post a Comment