தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் மலையகத்தமிழர்களே அன்றி யாழ்ப்பாண உயர்சாதிகள் அல்ல. யாழ்ப்பாண தமிழர்கள் சித்தி, சித்தப்பாவின் பிள்ளைகள் போன்று. ஆனால் சாதி அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறான போராட்டங்கள் மூலம் இலங்கையில் அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்தியத்தமிழர்களை மறைத்துவிட்டார்கள்.
நூற்றாண்டுகளாக அடிமைகள் போன்று இலங்கை அரசாலும் யாழ்ப்பாணத்தமிழர்களாலும் ஆளப்படும் இந்திய தோட்டத்தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தமிழர்களின் வீடுகளிலும் கொழும்பிலுள்ள அவர்களின் வர்த்தக நிலையங்களிலும் அடிமை சேவகம் பார்த்து வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
இந்தியத்தொழிலாளர்களின் சனத்தொகை இன்று இலங்கை தமிழர்களின் சனத்தொகையை கடந்து சென்றுகொண்டிருப்பது இலங்கை அரசால் இறுதியாக வெளியிடப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.
என்றாலும் புலிகளின் அடிவருடிகளாக செயல்படும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ வேண்டுமென்றே போராட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறார்கள் என்பதே உண்மை.
No comments:
Post a Comment