Tuesday, September 20, 2016

மனுஸ்மிருதி (Manusmriti)

பெண்கள் தலித்கள் பற்றி ஹிந்து தர்மம் சொல்லும் இன்னா நாற்பது. மனுஸ்மிருதி ஓர் ஆய்வு.


Manusmriti மனுஸ்மிருதி 

மனுஸ்மிருதி அல்லது மனு நீதி அல்லது மானுட தர்ம சாஸ்திரம் என்பது இந்து மதத்தினால் மானுட வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட சட்ட நூல். (மேற்கத்தேயர் டச்சு சட்டத்தை வழங்கியதை போல அல்லது இஸ்லாமியர்கள் உலகுக்கு ஷரீயா சட்டத்தை வழங்கியது போல என்று கொள்ளலாம்).

இது பிரம்மாவின் வார்த்தைகள். தர்மத்தின் அதி உயர்ந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் அடங்கிய புனித நூல். இதில் 2690 வசனங்களும் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உபதேசிக்கப்பட்டுள்ளன. 

இது முதல் மனிதராகவும் முதல் இந்து மன்னனாகவும் கருதப்படும் மனு என்பவருக்கு பிரம்மாவினால் செய்யப்பட்ட போதனை. அந்த மனுவின் பெயரினாலேயே முழு மனித இனமும் அழைக்கப்படுகிறது (மனு, மனிதன், மானவ, Man)

இந்து மதத்தின் மத சம்பந்தமான அனைத்து விடையங்களும் பிராமணர்களாலேயே கற்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற வேளையில் மனு நீதியில் பிராமணர்களுக்கு பக்கச்சார்பான நீதி வழங்கப்பட்டிருப்பதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு பிராமணரல்லாதாரால் முன்வைக்கப்படுகின்றது. 

மேலும் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதை பெண்ணுரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் விமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றனர்.

வர்ணங்களின் அடிப்படையில் மனுநீதி தீர்ப்பழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலித்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மனுநீதியின் பிரதியை எரித்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. 

இவ்வாறு குற்றஞ்சாட்டுவோர் எடுத்துக்காட்டாக பின்வரும் சுலோகங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். (சில பதிப்புகளில் எண்கள் வேறுபடலாம் எடுத்துக்காட்டாக 22வது சில பதிப்புகளில் 5/167 எனவும் சில பதிப்புகளில் 5/164 எனவும் உள்ளது) 

1. “ஸ்வாபவ் ஏவ் நரினம்....” – 2/213.

பெண்ணின் இயல்பு இவ்வுலகில் ஆணை வசியம் செய்வது. இதன் காரணமாக, அறிவு பெற்றவர்கள் பெண்களுடன் இருக்கும்கால் பாதுகாப்புடனேயே இருப்பர்.

2. “அவிதம் சம்லம்………..” – 2/214.

பெண்களின் இயல்பை சரியாகப்பெற்ற ஒருத்தியால் முட்டாளை மட்டுமன்றி ஒரு ஞானியைக் கூட அழிவில் இட்டுச்செல்ல முடியும். அவ்விருவரும் ஆசைக்கு அடிமையாகி அலைவர்.

3. “மத்ரா ஸ்வஸ்த்ரா………..” – 2/215.

நல்ல அறிவு பெற்றவர்கள் தங்கள் தாய்மாருடனோ மகள்மாருடனோ சகோதரிகளுடனோ தனித்திருக்கார். ஏனென்றால் காம இச்சை என்பது மிகுந்த வலிமையுடையது. அது உணர்ச்சியை தூண்டிவிடும்.

4. “நவ்த்வாஹே……………..” – 3/8. 

சிவந்த கூந்தலுள்ளவளையோ, மிகுதியான உடல் உறுப்பொன்றை பெற்றவளையோ (எ.கா. ஆறாம் விரல்), அடிக்கடி தேகாரோக்கியம் குறைபவளையோ, உடலில் உரோமம் அற்றவளையோ அல்லது மிகுதியான முடி உள்ளவளையோ மற்றும் சிவந்த கண்கள் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்யக் கூடாது.

5. “ந்ரக்ஷ் வ்ரக்ஷ்………..” – 3/9. 

நட்சத்திரங்களின் பெயர் கொண்டவளையோ, மரங்களின் பெயர் கொண்டவளையோ, நதிகளின் பெயர் கொண்டவளையோ, குறைந்த ஜாதி பெண்களையோ, மலைகளின் பெயர் கொண்டவளையோ, பறவைகளின் பெயர் கொண்ட பெண்களையோ, பாம்புகளின் பெயர் கொண்ட பெண்களையோ, அடிமை பெண்களையோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் பெயர் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.

6. “யஸ்தோ னா பாவேத்…..…..” – 3/10.

நல்லறிவு பெற்றோர் சகோதரன் இல்லாத பெண்ணையோ, சமூகத்தில் பிரபலமற்றவர்களின் பெண்களையோ திருமணம் செய்யக்கூடாது.

7. “உச்சயங்…………….” – 3/11.

நல்லறிவு பெற்றோர் உடல் அங்கங்களில் ஊனங்கள் அற்ற, அழகிய பெயருடைய, யானை போன்று அழகிய நடையுடைய, தலையிலும் உடலிலும் அளவான முடியுடைய மென்மையான கை கால்கள்களும் சிறிய பற்களையும் உடைய பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்.

8. “ஷுத்ர் ஐவ் பார்யா..……” – 3/12.

பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையோ, க்ஷத்ரிய பெண்ணையோ, வைஷிய பெண்ணையோ மட்டுமல்லாது ஒரு சூத்திர பெண்ணைக்கூட திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு சூத்திரன் ஓர் சூத்திர பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.

9. “நா ப்ரஹ்மன் க்ஷத்ரியா......” – 3/14. 

பிராமண, க்ஷத்ரிய, வைஷிய ஆண்கள் ஜாதி மாறி திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு துன்பம் வந்தாலும் அவர்கள் ஒரு சூத்திரப்பெண்ணை திருமணம் செய்யவே கூடாது.

10. "ஹீன் ஜதி ஸ்த்ரியம்……..” – 3/15. 

துவிப்பிறப்பு கொண்ட (பிராமண, க்ஷத்ரிய, வைஷிய) ஆண்கள் அறியாமையால் ஓர் கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்க நேரிட்டால் அதனால் அவர்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் கேவலத்துக்கு அவர்களே பொறுப்பு. இதற்கமைய அவர்களின் பிள்ளைகள் அனைவரும் சூத்திரர்களின் அனைத்து கேவலங்களையும் தம்மில் கொண்டிருக்கும்.

11. “சூத்ரம் ஷைனம்……” – 3/17. 

ஒரு கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்கும் ஒரு பிராமணன் அவனையும் அவனது முழுக்குடும்பத்தையும் இழிவுபடுத்துவதோடல்லாமல் கண்ணியங்களை இழக்கிறான் அத்துடன் பிராமண அந்தஸ்தையும் இழக்கிறான். அவன் பிள்ளைகள் யாவும் சூத்திரர்களே.

12. “தைவ் பித்ரியா………………” – 3/18. 

அத்துடன் (சூத்திரப்பெண்ணை மணமுடித்த) அந்த பிராமணனின் படையல்கள் எதுவும் பூஜைகளின் போது கடவுள்களாலோ அல்லது உயிரிழந்த ஓர் ஆத்மாவாலோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதிதிகளும் அவனுடன் சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள். மேலும் அவன் இறந்த பின் நரகத்தையே அடைவான்.

13. “ச்சண்டலாஷ் ……………” – 3/240. 

ஷ்ரத் திதி பூஜைகளின் போது பிராமணனுக்கு கொடுக்கப்படும் உணவை சண்டாளனோ (சூத்திரன்) பன்றியோ சேவலோ நாயோ அல்லது மாதவிடாய் பெண்ணோ பார்த்தலாகாது.

14. “நா அஷ்னியாத்…………….” – 4/43. 

பிராமணீயத்தை காக்கும் ஓர் உண்மையான பிராமணன் தன் மனைவியுடன் ஒன்றாக உண்ணமாட்டான். உண்ணும்போது அவளை பார்க்கமாட்டான். மேலும் அவள் உண்ணும்போதும், தும்மும்போதும், கொட்டாவி விடும்போதும் அவளை பார்க்கவும்மாட்டான்.

15. “நா அஜ்யந்தி……………….” – 4/44. 

ஒரு பிராமணன் அவனுடைய வலிமையையும் அறிவையும் பாதுகாக்கும் வகையில் கண்ணுக்கு மை பூசும் பெண்களையோ, நிர்வாணமான தன் உடலை கைகளால் தேய்ப்பவளையோ, பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பவளையோ பார்க்கமாட்டான். 

16. “மிர்ஷ்யந்தி…………….” – 4/217. 

வேசித்தனம் புரிபவளிடமிருந்தோ, பெண்களால் ஆளப்படும் குடும்பங்களிடமிருந்தோ, முதல் பத்து நாள் தாண்டாத இழவு வீட்டிலிருந்தோ உணவு வழங்கினால் ஒருவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

17. “பல்யா வா………………….” – 5/150. 

ஒரு சிறுமியோ பெண்ணோ அல்லது ஒரு கிழவியோ சுதந்திரமாக வேலை செய்ய கூடாது. அது அவள் வசிக்குமிடமாக இருப்பினும் சரியே.

18. “பல்யே பிடோர்வஷே…….” – 5/151. 

பெண்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் தனியே தன் காரியங்களில் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.

19. “அஷீலா கம்விர்தோ………” – 5/157. 

ஓர் கணவன் எந்தவொரு சிறப்பு தன்மையும் இல்லாதவனாக இருப்பினும், விலைமாதரிடம் செல்பவனாக இருப்பினும், கெட்டவனாக இருப்பினும், நீதியற்றவனாக இருப்பினும் பெண்கள் அவனை வணங்கி சேவகம் புரிய வேண்டும்.

20. “நா அஸ்த் ஸ்த்ரினாம்……..” – 5/158. 

பெண்கள் எந்தவொரு பூஜைகளையும் செய்யவோ அர்ப்பணிக்கவோ, விரதம் இருக்கவோ கடவுளின் அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் ஒரே கடமை கணவனின் சொல் கேட்பதும் அவனை சந்தோசப்படுத்துவதுமே; அந்த ஒரே காரணத்துக்காக அவள் சுவர்க்கம் செல்வாள்

21. “கமாம் தோ……………” – 5/160. 

(கணவன் இறந்த பின்) அவள் தன்னுடல் அழியும் வரை தூய்மையான மலர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் வேர்களிலும் அமர வேண்டும். தன் கணவன் இறந்த பின் எந்த ஒரு ஆணின் பெயரைக்கூட அவள் உச்சரிக்க கூடாது. 

22. “வ்யாபாச்சரே…………” – 5/167 (சில பதிப்புகளில் 5/164)

கணவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் ஒரு பெண் கேவலப்படுகிறாள், ஒர் தொழுநோயாளி ஆகுவாள், இறந்த பின் ஒரு குள்ள நரியின் கருப்பையை அடைவாள்.

23. “கன்யம் பஜந்தி……..” – 8/364. 

உயர் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரியும் ஒரு பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டாள். ஆனால் கீழ் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரிந்தால் அவள் தண்டிக்கப்படுவதுடன் ஊர்விலக்கு செய்யப்பட வேண்டும்.

24. “உத்மம் செவ்மந்த்சோ…….” – 8/365. 

கீழ் ஜாதிக்காரன் ஒருவன் உயர் ஜாதி பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்தால் கீழ் ஜாதி ஆணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பெண்ணும் கீழ் ஜாதியாக இருப்பின் அவன் அவளுக்குரிய இழப்பீட்டுக்குரிய தொகையை தந்தால் போதுமானது.

25. “யா தோ கன்யா…………….” – 8/369. 

கன்னித்திரை கிழிந்திருப்பவளுக்குரிய தண்டனையாவது அவளை மொட்டை அடித்து அவளின் இரண்டு விரல்களை வெட்டிவிட வேண்டும். அத்துடன் அவளை கழுதை மேல் ஏற்றி பவனிவரச்செய்ய வேண்டும்.

26. “பர்தரம்…………….” – 8/370. 

ஒரு பெண் தன் உயர்வையோ தன் குடும்பத்தின் உயர்வை பற்றியோ பெருமைகொண்டு தன் கணவனுக்குரிய கடமைகளை உதாசீனப்படுத்தினால் அரசன் அவளுக்கு வழங்கும் தண்டனையாவது எல்லோரும் பார்க்குமிடத்தில் அவளை வெறிநாய்களுக்கு முன்னால் எறிதலாகும்.

27. “பிதா ரக்ஷதி……….” – 9/3. 

பெண்கள் சுதந்திரமாக வாழ இயலாதவர்கள் ஆதலால் அவர்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.

28. “இமாம் ஹி சர்வ்………..” – 9/6. 

மனைவி மீது பூரண அதிகாரத்தை செலுத்துவது ஒரு கணவனின் கடமையாகும். உடல் ரீதியாக பலஹீனமான ஆணாகவிருப்பினும் அவனும் தன் பூரண அதிகாரத்தை செலுத்தியே ஆகவேண்டும்.

29. “ப(ட்)டி பர்யம் ……….” – 9/8. 

ஒருவனின் மனைவி கருத்தரிக்கும் போது அவளின் கணவனே அவள் கர்ப்பத்தில் கருவாக உருவாகி அவனே அவளுக்கு மகனாகவும் பிறக்கிறான். இதன் காரணமாகவே பெண் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.

30. “பணம் துர்ஜன்………” – 9/13. 

பெண்களின் கெட்ட குணங்கள் ஆறு அவையாவன: மது அருந்துதல், கெட்டவர்களோடு சேர்தல், கணவனை பிரிதல், அலைந்து திரிதல், நீண்ட நேரம் உறங்குதல், அதிகமாக கதைத்தல் ஆகியனவாம்.

31. “நய்டா ரூபம்……………” – 9/14. 

அவ்வகையான (9/14) பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள், மேலும் வயது பாராமல் எந்த ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார்கள். 

32. “பூன்ஸ் ச்சல்யா…………” – 9/15. 

மேலும் அத்தகையவர்கள் ஆண்கள் மீதுள்ள மோகத்தாலும் அடக்க முடியாத கோபத்தாலும், இரக்க குணமின்மையாலும் தங்கள் கணவன்மாருக்கு உண்மையாணவர்களாக இருக்கமாட்டார்கள்.

33. “நா அஸ்தி ஸ்த்ரினம்………” – 9/18. 

பெண்கள் நம்காரத்தின்போதோ ஜத்காரத்தின் போதோ வேத மந்திரங்களை ஓதக்கூடாது ஏனென்றால் பெண்கள் வேத வசனங்களில் உறுதியும் அறிவும் அற்றவர்கள். மேலும் பெண்கள் சுத்தமற்றவர்கள் மற்றும் அசத்தியத்தை பிரதிபலிப்பவர்கள்.

34. “தேவ்ரா ஸபிண்டா………” – 9/58. 

கணவனுடன் கூடி சந்ததியை பெற்றெடுக்க முடியாத பெண் தன் கணவனின் சகோதரனுடனோ அல்லது கணவனின் வேறு உறவினர்களுடனோ கலந்து சந்ததியை உண்டாக்கிக்கொள்ள முடியும்.

35. “வித்வயம்…………….” – 9/60. 

ஒரு விதவையை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒருவன் இரவில் அவளை அணுகி வெண்ணெய் பூசி ரகசியமாக ஒரு மகனை பெற்றெடுக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் இரண்டாவது மகனை பெற்றெடுக்க முடியாது.

36. “யதா விதி……………..” – 9/70. 

நிலைபெற்ற சட்டப்பிரகாரம் மனைவியின் சகோதரி ஆகிறவள் வெண்ணிற ஆடை அணிந்து தூய எண்ணத்துடன் தன் சகோதரியின் கணவனுடன் ஓர் கர்ப்பம் தரிக்கும் வரை இணைந்திருக்க முடியும். 

37. “அதி க்ரமே……………” – 9/77. 

கணவன் சோம்பேறியாக இருப்பினும் மதுவுக்கு அடிமையானவனாக இருப்பினும் நோயாளியாக இருப்பினும் மனைவி அவனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் இல்லாது போனால் அவளை மூன்று மாதம் விலக்கி வைப்பதுடன் அவள் அணிகலன்களும் களையப்பட வேண்டும்.

38. “வந்த்யாஷ்தமே…….” – 9/80. 

ஒரு மலடி எட்டாவது வருடத்திலும் பிள்ளைகளை இழந்தவள் பத்தாவது வருடத்திலும் பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றவள் பதினோராவது வருடத்திலும் நீக்கப்பட்டு கணவன் வேறொருத்தியை மணக்க முடியும். சண்டை பிடிப்பவளோ உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

39. “த்ரின்ஷா……………….” – 9/93. 

மதச்சடங்குகளை நிறைவேற்றுவதில் ஏதாவது ஒரு தடங்கல் வந்து ஆண் திருமணம் முடிக்கவேண்டி ஏற்பட்டால் இருபத்தி நான்குக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள ஆண் எட்டுக்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட வயதுள்ளவளை திருமணம் செய்ய வேண்டும்.

40. “யம் ப்ரஹ்மன் ஸ்தோ…….” – 9/177. 

ஒரு பிராமணன் ஒரு சூத்திர ஸ்த்ரீயை திருமணம் செய்தால் அவர்களின் மகன் பர்ஷவ் என்றோ சூத்திரன் என்றோ அழைக்கப்படுவான் இதற்கு காரணம் அவன் சமூகத்தில் ஒரு பிணத்தை போன்றவன்.

8 comments:

  1. Dalit Hindu varnathulaye illaye avunga panchamagargal thana,

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மனுதர்ம விதிச் சட்டங்களை கடந்து, இன்றைக்கு அனைத்து மக்களுக்கும் ஒரே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்ற சுதந்திர இந்தியாவில் மனுதர்ம நடைமுறை எங்கே? இருக்கிறது.

    மேலும் 9வது அத்தியாத்தின்படி பெண்கள் எங்கே? அடிமைபட்டுக் கிடக்கிறார்கள்.மருமணம் செய்துக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை வளர்ச்சியை நோக்கிதான் சென்றுக்கொண்டிர்கிறது.

    மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் தொடகூட முடியாதென்று இந்திய சட்டம் சொல்லும்பொது, மனுதர்மம் எங்கே? இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சாதி என்ற வார்த்தை உள்ளவரை மனு(அ)தர்ம சாஸ்திரம் உள்ளது ஐயா

      Delete
  4. மனுதர்மத்தை குற்றமாக குறிப்பிட்டு எந்த சட்டமும் தடை செய்துவிடவில்லை என்கிற போது அது இருப்பதாகத்தான் பொருள். மனுதர்மம் சொல்லும் சரத்துகள் பலவும் இன்றும் வேண்டும் என்போர் இருக்கின்றனரே. அவ்வாறு அவர்கள் இருக்கும் வரை மனுதர்மம் இருப்பதாகத்தானே பொருள். மனுதர்ம சட்டத்தைத்தானே பிராமணர்கள் என்போர் சனாதன தர்மம் என்கிற பெயரிட்டு அழைக்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது மனுதர்மம் இல்லை என்று கருதயிலாது அல்லவா. அவ்வாறு கருதயியலாது என்கிற போது அதற்கு எதிர்ப்பு இருக்காதா என்ன?

    ReplyDelete
  5. மனுதர்மம் அல்ல இது மயிறு தர்மம்

    ReplyDelete
  6. மனுதர்மம் என்பது அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக எழுதிக்கொண்டது. மூடநம்பிகாகையின் தாக்கம் அபிரிமிதமாக இருந்த பொழுது மனுதர்ம வாசகங்கள் அரசர்களாளும் மக்களாலும் மறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த அறிவியல் யுகத்தில் மதங்களும், கடவுள்களும் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று. இது காலத்தின் கட்டாயம். இல்லையேல் நாய் வாயிக்குள் கையை விட்ட கதியாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  7. மனுதர்ம சாஸ்திரம் இதை நிறைவேற்றுவதில் எந்தவித தவறும் கிடையாது சரியாக வகுத்துள்ளார்கள் இதை இந்த சட்டம் ஆதி முதல் அந்த வரை வாழ வேண்டும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் நான் முழு அலுவலகம் உத்தரவாதம் கொடுக்கின்றேன் ஏனென்றால் மனதரும சாஸ்திரம் தொல்காப்பியம் நூலு தொட்டு இன்றைய காலம் வரை தமிழர்களாய் இருந்து வழிநடத்திச் செல்கின்றார்கள் இந்த கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் இவைகளை காத்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு மிக அருமையான ஒரு நூலாக இந்த மனு சாஸ்திரம் இருப்பது நம்ம அறிவோம் அனைவரும் வாங்கி படித்துக் கொள்ள வேண்டும் சாதி அவரவர் சாதியில் அவரவர் பெண் கட்டுங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுங்கள் விருப்பப்பட்டால் பிராமணன் சத்ரியன் வைசியன் இவர்களுடைய பெண்களை ஜாதி மாறி கல்யாணம் திருமணம் செய்து கொள்ளலாம் சூத்திர பெண்களை திருமணம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்த தேவேந்திர குல மக்களும் கள்ளர் பரபரப்புடையரும் குறவன் குறத்திகளும் இடையர்களும் கோளார்களும் மீனவ சமுதாயங்களும் வன்னியரும் வன்னியர்களுக்கும் இது பொருத்தமாக இருக்கிறது வன்னீரும் தேவேந்திரனும் ஒரு தாய் பிள்ளை என்று உலகம் சமூகம் அறியும் அருமையான இந்த பதிவு முழுமையாக இந்த தர்ம மனுஷ்ருதியை படித்து இதனுடைய சட்டத்தை ஏற்றுவதற்கு நீங்கள் எல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் பிராமணன் சத்ரியன் வைசியன் சாதி என்பது எழுதப்பட்டிருப்பது நமது புரிதலுக்காக மட்டுமே தவிர வேறு அந்த கீழ் நோட் பார்வை அல்ல

    ReplyDelete