இது ஈழத்தமிழர்களால் அனுப்பப்பட்ட ஒரு பதிவு. அதை நாங்கள் நடுநிலை தவறக்கூடாது என்பதற்காக பதிவிடுகிறோம். மாற்றுக்கருத்துக்களும் பதிவிடப்படும்.
போராட்டங்கள் ஓய்வதில்லை.... போராளிகள் வீழ்வதில்லை..... விடுதலைகள் தோற்பதில்லை.
காஷ்மீரும் ஈழமும் ஒரு கொடியில் மலர்ந்த இரு மலர்கள். ஈழ மலர் இந்திய ராணுவ ராஜதந்திர துணைகொண்டு இலங்கை அரசினால் சிதைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக துடைக்கப்படவில்லை.
காஷ்மீர் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.... ஆனால் இம்முறை எதிர்ப்பு பலமாக இருக்கிறது. ஈழ விடயத்தில் இந்தியா விட்ட தவறை காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் செய்யாமலிருப்பதே காஷ்மீர் போராட்டத்தின் வலிமைக்கு முக்கிய காரணம். இந்தியா செய்தது தவ்றல்ல. துரோகம்.
காஷ்மீரிகளின் விடுதலை ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் மனங்களில் விடுதலை தீபத்தை மற்றொரு முறை ஏற்றும் என்பதில் சந்தேகமில்லை. காஷ்மீர் விடுதலை அழிக்கப்பட வேண்டுமென்று இலங்கையிலுள்ள ஒவ்வொரு சிங்களவனும் விரும்புகிறான். அது சொல்கிறது ஏகாதிபத்தியங்களின் ஒற்றுமையை.....
No comments:
Post a Comment