Thursday, March 10, 2016

லெமூரியா (Lemuria) கண்டம், குமரிக் கண்டம் என்பன பற்றிய தெளிவான ஆய்வு

லெமூரியா கண்டம் உண்மையா? 
குமரிக்கண்டம் என்பது உண்மையா? 
லெமூரியாவும் குமரிக் கண்டமும் ஒன்றா?

(ஒரு விரிவான ஆய்வு)



படம்: குமரிக்கண்டம் பற்றி அதன் ரசிகர் ஒருவர் வடிவமைத்த படம்.

இவை பற்றி சில ஞானப் பழங்கள் சொல்லும் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக நடுநிலையாக விஞ்ஞானபூர்வமாக ஆராய்வோம். (முடியுமான வரை இவ்வகையான ஆதாரங்களை திரட்டியுள்ளேன். ஏதாவது விடுபட்டிருந்தால் அறியத்தாருங்கள்)

Sunday, March 6, 2016

பெண்ணியம் (feminism): இலகு தமிழில்

பெண்ணியம் (feminism): இலகு தமிழில்



நீங்கள் எங்கு பார்த்தாலும் பெண்ணியம் பற்றி புரிந்து கொள்ள முடியாத அதிமேதாவித் தனமான கட்டுரைகளே நிறைந்திருக்கும். இதற்குக்காரணம் இதை எழுதும் பெரும்பாலோர் ஊடகவியலாளர்கள். அது சரி ஊடகவியலாளர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்?
இருவரும் கற்றது ஒரே பாசறையில்தான்(கட்டுரையை வாசிக்கும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்).

விடயத்துக்கு வருவோம்.
இது எங்கே யாரால் எப்போது எதற்காக துவங்கப்பட்டது?
விடைகள் ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்தது.

விடைகள்:

யாரால்: 
பெண்களால் என்று சொல்லப்படும். அது உண்மைக்கு பூசப்பட்ட பொய் முலாம். ஒரு ஆண்களின் கூட்டம் பின்னாலிருந்து சில பெண்களை இயக்கியது என்பதே உண்மை.

எங்கே: 
கீழைத்தேய நாடுகளில்தான் பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது. ஆகவே இங்கேதான் துவங்கப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இது மேற்குலகில் உருவானது.
அது அந்தக்காலத்தில் மேற்குலகிலும் பெண்களுக்கு உரிமை இருக்கவில்லை என்று நீங்கள் கருதினால் அதுவும் தவறு ஏனென்றால் அடுத்த கேள்விகளை பாருங்கள்.

எப்போது:
புதிய உலக ஒழுங்கின் ஆரம்ப காலம் (18ம் நூற்றாண்டுக்கு பின்னர்)

எதற்காக: 
பாரிய இலக்குகளை வைத்திருந்தார்கள். இந்த இலக்குகளுக்காக இவர்கள் பயன்படுத்தும் பல நூற்றுக்கணக்கான வழிகளில் ஒன்றுதான் இந்த பெண்ணியம்.
இவர்களின் பிரதான இலக்கு- காலணித்துவ யுகத்திற்கு பிறகு நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கிய பின்பும் உலகை மறைமுகமாக ஆட்சி செய்வது. எப்படியென்று யோசிக்கிறீர்களா?

ஆட்சி செய்வதன் நோக்கம் தாம் சரியெனக் கருதும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது. காலணித்துவக் காலத்தில் காலணித்துவ நாடுகளின் கொள்கைகள் சட்டமாக இருக்கும். சுதந்திரத்துக்கு பின் சுதேச சட்டங்கள் தானே வர வேண்டும்? 
ஆனால் விரும்பமாட்டார்கள். காலணித்துவ சட்டத்தையே அடிமை நாடுகள் சுதந்திரத்துக்கு பிறகும் பின்பற்ற வைத்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி அவர்களுக்கு. அது மறைமுக ஆட்சி. (இந்தியாவின் சட்டத்தை இய்ற்றிய அம்பேத்கார் எங்கே கல்வி கற்றவர்? புரிகிறதா?)

அவர்களின் பிரதான இலக்கு உலகை படைத்த ஒரு இறைவன் இருக்கிறான் என்ற கொள்கையை நம்பாத ஒரு மிகப்பெரும் சமுதாயத்தை (Godless world) உருவாக்குவதே. இதில் மதங்களில் தீமையாக கூறப்பட்ட பெரும்பாலான விடயங்கள் ஆகுமாக்கப்படும். 

Eg: 
விபச்சாரம், தன்னினச்சேர்க்கை,  என்பது உரிமையாகவும்
கொலை என்பது மரண தண்டனை வழங்கக்கூடிய குற்றமில்லை என்றும்
பாலியல் பலாத்காரம் சிறிய குற்றம் என்றும்
குற்றவாளிகளை எல்லா வசதிகளையும் கொடுத்து பராமரிப்பதும்
இன்னும் மற்றும் அனைத்து குற்றங்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சில வேளை சில குற்றங்களை எதிர்ப்பது போல் நடிப்பார்கள். ஆனால் அந்தக்குற்றத்துக்கு தேவையான அனைத்து சூழலையும் ஏற்படுத்துவார்கள். துப்பாக்கிக்கு அனுமதி வழங்கிவிட்டு கொலை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதை போல.

குற்றங்களை அதிகரிக்கச்செய்ய சூழலை மாற்ற வேண்டும்.
•மது பாவனை அதிகரிக்க வேண்டும். (ஆண்களை ஏற்கனவே சீரழித்தாயிற்று) 
•பெண்களும் மது அருந்த வேண்டும் (பெண்சமத்துவம்)
•விபச்சாரத்திற்கான தூண்டல்கள் பார்க்குமிடமெல்லாம் இருக்க வேண்டும்
•பெண்களின் மர்ம உறுப்புகள் நேரடியாகவோ இறுக்கமான ஆடைகள் மூலமாகவோ வெளித்தெரிய வேண்டும் (பெண்ணுரிமை)
•பெண்கள் ஆண்களுடன் சகஜமாக கட்டி உறவாட வேண்டும் (பெண்சமத்துவம், சினிமா நடிகர் நடிகைகளை கொண்டு இதை அடைவார்கள். இப்போது அரசியல்வாதிகள் கூட முத்தம் கொடுத்துக்கொள்கிறார்கள்)
•Pornography என்பது தனிமனித உரிமை என்பார்கள். தடை செய்யும் அரசை மீடியாவின் உதவியுடன் வீழ்த்துவார்கள்.
•ஆயுதப்பாவனையை அதிகரிப்பார்கள்


ஆண்களுக்கு மத்தியில் இவற்றை பரப்புவது எளிதாக இருந்தது. ஆனால் பெண்கள் பின்வாங்கினர். அதற்கான காரணம் அந்தந்த கலச்சாரங்களில் இருந்த ஒழுக்க விழுமியங்களை அவர்களில் அதிகமானோர் பின்பற்றினர். இதை பெண்களிடத்தில் நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டுமென்றால் பெண்களையே இதில் பிரச்சாரகர்களாக்க வேண்டும் என அறிந்து கொண்டு பெண்ணுரிமை இயக்கங்களை துவங்கினார்கள். 
சினிமாவை துணைக்கு அழைத்தார்கள். சினிமாவை Porn என்றும் சாதாரண சினிமா என்றும் இரண்டாக பிரித்து சாதாரண சினிமாவில் வரும் ஆபாசங்கள் porn அல்ல கலைத்துவம் என்று கூறி மக்களை நம்பச்செய்து. சினிமாவில் நிர்வாணமாக நடிப்பது நடிப்பாற்றலின் உச்சக்கட்டம் என்று சொல்லி விருதுவழங்க ஆரம்பித்தார்கள். அந்த விருதுகளின் பெருமைகளை அவர்களின் மீடியாக்கள் பேசிக்கொண்டிருக்கும்.

சினிமா நடிகர் நடிகைகள் ஆடைக்குறைப்பு செய்வது Fashion என்று பறைசாற்றுவார்கள். முறைதவறிய காமத்தை திரையில் காட்டி அவர்களின் ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பார்கள். எந்த நடிகர் நடிகைகளாவது ஒழுக்கம்(?) அது இது என்று பேசினால் சில நாட்களில் அவர் மீடியாக்களால் கண்டுகொள்ளப்படமாட்டார். மார்கெட் இழந்தவர் என்று ஓரங்கட்டப்படுவார்.

அழகு ராணிப்போட்டிகள் நடத்தி இறுக்கமான கலாச்சாரம் உள்ள நாடுகளில் பிகினியை மேல்தட்டு மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாக்குவார்கள். நோக்கத்தை அடைந்துவிட்டால் அந்த நாட்டு அழகிகளை பின்னர் கண்டுகொள்ள மாட்டார்கள். (அழகிகள் முடிந்து விட்டார்களோ)

பெண்ணுரிமையையும் Journalism ஐயும் ஒரே பாசறையில் கற்றுக்கொடுப்பார்கள். ஆகவே பெண்ணுரிமை என்ற பெயரில் கீழைத்தேய கலாச்சாரங்கள் அவமதிக்கப்பட்டு இவை காலத்துக்குதவாதவை என்று தீவிரமாக பிரச்சாரம் செய்யப்படும். நோபல் பரிசுகள், விருதுகள் வழங்கப்படும். 

முதலில் சாதாரண Ladies club ஆக ஆரம்பிக்கப்பட்டு சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவார்கள்(நல்ல விடயம்). 
ஒரு நாள் திடீரென்று ஒரு மேலைத்தேய அல்லது அங்கு கல்வி பெற்ற கீழைத்தேய பெண்களை Chief guest ஆக கூட்டிவருவார்கள். அவர்கள் சாதாரணமாக மது அருந்துவார்கள் அசால்ட்டாக சிகரட் புகைப்பார்கள். கொடுத்தால் தவிர்ப்பது நாகரீகம் இல்லை என்பார்கள். இதில் சில பெண்கள் கவரப்படுவார்கள்.
இவ்வாறு விஷ விதைகள் விதைக்கப்படும்.
இப்படிப்பார்த்தால் முன்னர் இருந்த பாரத நாடு ஒரு நாகரீகம் அறிந்திராத காட்டுமிராண்டிகளின் கூடாரம். கழிசடைகளின் கழிவறை. ஆனால் இவற்றை நேரடியாகக் கூறமாட்டார்கள் ஏனென்றால் மக்கள் பின்னியெடுத்து விடுவார்கள் என்று தெரியும். 

இவ்வாறு கவரப்பட்ட அந்த சில பெண்கள் பின்னர் தலைமைப்பொறுப்புக்கு வருவார்கள். விபச்சாரிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் அசிங்கங்களை இவை "அசிங்கம்" இல்லை என்பார்கள். ஏனென்றால் இவர்களின் குருநாதர்களின் "அசிங்கத்துக்கான" வரைவிலக்கணம் வேறு. 

ஓரினச்சேர்க்கை பாலினமாற்றம் என்பன பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படுகிறது அவற்றை மாற்றக்கூடாது என்று அரைகுறை விஞ்ஞானம் பேசுவார்கள் (இது பற்றிய விஞ்ஞானக் கட்டுரை பின்னர் எழுதுகிறேன்). 
குற்றம் செய்பவன் கூட அடக்கமுடியாத கோபத்துக்கான பரம்பரை இயல்புகளை கொண்டிருப்பவன்தான் அதற்காக குற்றம் செய்வது அவன் உரிமை என்று கூறுவதில்லை. இவ்வகையான பரம்பரை அலகுகள் (Polygenic) புறச்சூழல் காரணிகளால் (External environmental influences) மாற்றப்படக்கூடியவை. இவற்றை அந்தந்த கலாச்சாரங்களும் நாகரீகங்களும் தீர்மானிக்கும். இந்தியாவில் கூட திராவிடர் கலாச்சாரம் பல்வேறு வழிகளில் ஆரியர்களின் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. 

இயற்கை சூழல் உடலமைப்பு கலாச்சாரம் மதம் என்பன இக்காரணிகள். இவற்றில் மிக அதிகமாக செல்வாக்கு செலுத்துவது மதங்கள். இவர்களுக்குத்தான் மதங்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கை இருக்கிறதே இதற்காக இங்குள்ள மதங்கள் கூறும் ஒழுக்கங்களின் வரைவிலக்கணத்தை மாற்றத்தொடங்கினார்கள். 

இதற்கான ஏற்பாட்டில் ஒன்றுதான் பெண்ணியம் (Feminism). மேலோட்டமாக பார்த்தால் "அட சூப்பரு" என்று விஜய் டிவியின் ம.க.ப. ஆனந்த் போல கத்தத்தோன்றும். ஆனால் உள்நோக்கங்கள் நச்சு விதைகள். 

பெண்ணியம்தான் இறுதியாக நடந்த கலச்சரத்தாக்குதல் அல்ல... இன்றுவரை நடக்கும் ஜல்லிக்கட்டு தடை போன்றவையும் இவ்வகயான கலாச்சார (மற்றும் பொருளாதார) தாக்குதல்களே... (இது பற்றி தனி விளக்கம் உண்டு).

இந்த நவீன பெண்ணியவாதிகளை உருவாக்கியதில் சமூகங்களுக்கும் பங்குண்டு. மதங்களின் பெயரால் மதங்களுக்குள் நுழைந்த பிழையான சித்தாந்தங்களை கண்டறிந்து மதங்களை தூய்மைப்படுத்த அந்தந்த மதங்கள் தவறியதும் ஒரு காரணம் (மதங்களை தூய்மைப்படுத்த உண்மையில் புறப்பட்ட சிலரையும் மதவாதி, அடிப்படைவாதி என்று முத்திரை குத்துவதையும் செய்வார்கள் என்பது வேறு கதை). மற்றும் சில ஆண்களின் பெண்கள் மீதான கொடுமைகளுக்கு சட்டங்கள் தண்டனை வழங்க தவறியமை, போன்றவை....

இவற்றை மீடியாவின் உதவியுடன் இவை மட்டுமே நாட்டில் நடப்பதாக பிரச்சாரம் செய்து தங்கள் தேவையை சாதித்துக்கொண்டார்கள். 

இறுதியாக ஒரு உதாரணம்:

வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை.
இவர்களாலேயே வளர்க்கப்பட்ட கமலாதாஸ் என்ற பெண்ணியவாதி (தன் பாலியல் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் Biography வெளியிட்டவர், தன்னையே நிர்வாணமாக வரைந்து கண்காட்சி நடத்துமளவுக்கு சென்றவர்) பின்னர் இஸ்லாம் சமயத்தில் இணைந்து கடுமையான ஆடைக்கட்டுப்பாடுகளை பேணத் தொடங்கினார். என்ன நடந்தது? நீங்கள் நினைப்பது சரி.
அவரால் பயிற்றுவிக்கப்பட்ட அதே பெண்களால் நிராகரிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். மீடியாக்களால் புறக்கணிக்கப்பட்டார். இவரைக் கொண்டாடிய சில மீடியாக்களே இவரை மனநிலை பிறழ்ந்தவர் என்று காட்ட முற்பட்டன. 


Saturday, March 5, 2016

இந்திய இலங்கை பிரிவினைவாதங்கள்

பிரிவினைவாதம், சுதந்திர(?) போராட்டம். 

 







விரும்பாதவர்களை ஏன் ஆட்சி செய்ய வேண்டும். இந்தக்காஷ்மீரை போய்த்தொலை என்று விட்டிருந்தால் இன்று இந்தியா வல்லரசாகியிருக்கும். 

ஏலவே அதிகமான இளம் ராணுவ வீரர்களை பலிகொடுத்தாயிற்று. இன்னும் எத்தனை பேரை அந்தக்கடுங்குளிரிலும் பனியிலும் பலி கொடுப்பது? இன்னும் எத்தனை இளம்பெண்களை விதவைகளாக்குவது? இருதரப்பும் நிறுத்தப்போவதில்லை என்றால் இது இப்படியே தொடர்ந்தால் யாருக்கு லாபம்?

காஷ்மீரை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் இதை வைத்துக்கொண்டு மதவாத அரசியல் நடத்தும் சுயநலவாத அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள். 

காஷ்மீர், ஈழம் போன்ற பிரச்னை உள்ள இடங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே ஜனநாயகம். 

மலேஷியா சிங்கப்பூரை உதறியது.... இன்று மலேசியா ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்து வருகிறது. இரு நாடுகளும் நல்லுறவையும் பேணுகின்றன. இந்திய இலங்கை மத்திய அரசுகளுக்கு இது ஓர் நல்ல உதாரணம்.

ஆனால் ஒரு விடயம். காஷ்மீரை கொடுக்க முன் பங்களாதேஷ் போன்று அதை நட்பு நாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் (கஷ்டம்தான் ஆனாலும் வெள்ளைக்காரனிடம் இந்த பிரித்தாளும் தந்திரத்தை கற்றுக்கொள்ளலாம்)
 
இதை இந்தியாவும் இலங்கையும் உணர்ந்து அன்றே செய்திருந்தால் இன்று இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்திகளாகி இருக்கும். 
சிங்கப்பூர் மலேசிய ஆட்சியாளர்கள் எழுபதுகளில் இலங்கையின் வளர்ச்சி உள்நாட்டுக்கட்டமைப்பை பார்த்து பாடம் கற்றார்கள். ஆனால் முப்பது வருடகால யுத்தம் இலங்கை அரசுக்கு கொடுத்தது என்ன? தமிழர்களுக்க்கு கொடுத்தது என்ன?

இந்தியனா, தமிழனா?

சிந்திப்பதற்கு மட்டும்.... 


(இந்த புகைப்படத்தின் உறுதித்தன்மை தெரியாது. யாரோ விக்கிப்ப்டியாவுக்கு இட்டிருந்ததை நான் சுட்டு இங்கே போட்டுள்ளேன்)

இந்தியா உன் நாடு அல்ல....
அது ஹிந்தி பேசும் ஆரியர்களின் நாடு.... 
நீ தமிழன்....
முன்னர் ஒரு காலத்தில் தனி நாடு கண்டிருந்தவன்....
இன்று பெயரில் மட்டுமே நாடு ஒட்டிக்கொண்டிருக்கிறது....
நீயோ வடக்கிடம் அடிமை பட்டுக்கிடக்கிறாய்....
உன் உடன் பிறப்புகள் இலங்கையில் கொல்லப்படுவதற்கு உதவியது உன் நாடு என்று கூறப் போகிறாயா?...
அல்லது அவர்களின் இறப்புக்கு கண்ணீர் விடுவதற்கு கூட ஹிந்திக்காரனிடம் அனுமதி பெறவேண்டி இருக்கும் உண்மையை உணரப்போகிறாயா?...
புரிந்து கொள் தமிழ்"நாடு" என்று பெயரை வைத்து உன் அரை மணி நேர உண்ணாவிரத தலைவர்கள் உன்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.... 
நீ இந்தியனல்ல.... 
ஹிந்திக்கார ஆரியனிடம் அடிமைப்பட்டு கிடக்கும் நாடற்ற தமிழன்.!!!


தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் சோழ்ப்பேரரசின் கொடி பறந்தது. எந்த ஹிந்திக்காரனும் வாலாட்ட முடியவில்லை. ஆனால் இன்று ஹிந்திக்காரனின் கொடி பறக்கிறது. நாடிழந்து மானமிழந்து வடக்கிடம் கையேந்தி நிற்கிறான் தமிழன். 

என்றும் தமிழர்கள் தன் பழைய சாம்ராஜ்ஜியங்களை சிந்திப்பதை மறக்கடித்து அவனின் காலடியில் இருப்பதை உறுதிப்படுத்த பார்ப்பண சுவாமிகளை இங்கே விதைத்துள்ளான்.

சிலர் மெசேஜ் பண்ணுகிறார்கள் இது துரோகம் என்று
அவர்களுக்கு சொல்வது இதுதான்:

அடிமைத்தனத்தில் மூழ்கிக்கிடப்பவனுக்கு மானம் ரோஷம் சூடு சொரணை கொண்டவனை பார்த்தால் துரோகியாகத்தான் தெரியும். எங்கே உன் பாண்டிய நாடு? எங்கே உன் சோழ நாடு? அந்த நாடுகளை 1947 இல் பிரிட்டிஷ்காரன் ஹிந்திக்காரனிடம் கொடுத்தான். பாடப்புத்தகத்தை தாண்டி சிந்தனை செய் நன்பா....

திருட்டு விசிடி (Thiruttu VCD)



திருட்டு விசிடி ஒரு எளிய விளக்கம்

பாரம்பரிய திருட்டு விசிடி என்பது ஒரு திரைப்படத்தை அது சிடி ஆகவோ டிவிடி ஆகவோ உத்தியோகபூர்வமாக வெளிவருவதற்கு முன்னால் அதை தியேட்டர் ஸ்க்ரீனில் இருந்து கேமிராவில் காப்பி பண்ணி மொத்தமாகவும் சில்லரையாகவும் சிடி டிவிடிக்களில்(டிவிடி என்றாலும் பெயர் திருட்டு விசிடி தான்) விற்பார்கள். இலங்கைத் தியேட்டர்களில் போன் மூலம் வீடியோ எடுப்பது அவ்வளவு கடினமில்லையாம். ஏனெனில் இருப்பது சிங்கள போலீஸ் அவர்கள் தமிழர்கள் உள்விவகாரத்தில் தலையிடுவது குறைவு. ஆனாலும் மிக அதிகமான திருட்டு வீடியோக்கள் இந்தியாவில்தான் எடுக்கப்படுகின்றன. 

ஆனால் தற்போது இவற்றுடன் சேர்த்து (அதைவிட அதிகமாக) இண்டர்நெட்டில் அப்லோட் செய்து விடுவார்கள். அப்லோட் செய்பவர்களுக்கு இந்த வெப்சைட்டுக்கள் பணம் வழங்கும்.  இந்த வெப்சைட்டுக்களில் அதிகமான மிகப்பிரபலமானவை ஐரோப்பா மற்றும் கண்டாவில் வாழும் இலங்கைத்தமிழர்களால் நடத்தப்படுவதால் இந்திய அரசுக்கு இவற்றை கட்டுப்படுத்துவது தடைசெய்வதில் அதிகமான நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. 

திருட்டு விசிடிக்கள் குறிப்பாக சினிமாவை ரசிக்கும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தியேட்டர்களில் ரவுடிகளின், ஒழுக்கம் கெட்ட குடிமகன்களின், குடிக்காத வெறிமகன்களின் சேட்டைகளிலிருந்து தங்களை பாதுகாக்கவும், ஆண்களின் சீண்டல்களிலிருந்து பாதுகாக்கவும்... ஆபாச காட்சிகளின் போது தாங்கள் விசிலடித்து அருவருப்பாக ஓரக்கண்ணால் பார்க்கப்படுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

கேண்டீன் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளை பிடிக்காத நடுத்தர மற்றும் ஏழை மக்களும் தங்கள் வீடுகளிலேயே சாப்பிட்டுக்கொண்டு படத்தை பார்க்கலாம்.





(அப்படியென்றால் திரைப்படம் எடுத்த பண முதலைகளுக்கும் நடிகர்களுக்கும் நட்டம்தானே என்று நீங்கள் நினைத்தால்... ஐ யாம் சாரி... நீங்கள் வளர வேண்டும். அவனுகளெல்லாம் ஆல்ரெடி செட்டிலாகியிருப்பதே ஏழை மக்கள் பணத்தில் தான். அதுவும் தியேட்டரில் படம் பார்க்கும் ஏனையவர்களினது பணம் அவனுகளுக்கு போதும்)

அரசாங்க உதவித்தொகைகள் ஊக்குவிப்புகள் கிடைக்காத ஒரே தொழிலாளர்கள் திருட்டு வீசீடி உற்பத்தியாளர்களே. அவர்கள் உயிரைக்கொடுத்து வீடியோ பண்ணி ஏழை பாழைகளும் படம் பார்க்க உதவுகிறார்கள். 
இதில் ஒன்றும் பணக்கார முதலைகளான தயாரிப்பாளர்களினதோ நடிகர் நடிகையினதோ சொத்துக்கு பங்கம் ஏற்படாது. திருட்டு வீசீடி ஏழைகளின், நடுத்தர மக்களின், தியேட்டர் அசிங்கங்களை வெறுப்பவர்களின் அடிப்படை உரிமை. 
சில வெறித்தனமான ரசிகர்கள் சிந்திக்க வேண்டும். எத்தனை நூறுகளும் இருநூறுகளும் நீ உன் நடிகனுக்கும் தயாரிப்பாளனுக்கும் கொடுத்துள்ளாய். அவன் செட்டிலாகி விடுவான், உன் குடும்பம் சோத்துக்கு சிங்கி அடிக்கும். 

சில கலைச்சொற்கள்:
HDRip - மிகத்துல்லியமான வீடியோ 1080, 720 போன்றவை வீடியோவின் பிக்சல் சைஸ் நம்பர் கூடினால் துல்லியமும் கூடும்.
DVDRip - very good clear
Scr - தியேட்டரில் தெரியாமல் படம் பிடித்தது (ஓரிரு நாட்களுக்குள் வெளிவரும். ரசிகப்பெருமக்களின் கூச்சல்கள் விசில்கள் நிறைந்தது)

வாழ்க திருட்டு வீசீடி.... வளர்க அதன் புகழ்..... "அம்மா திருட்டு விசீடிக்கள்" ஆரம்பிக்கப்பட வேண்டும். 

இன்டர்நெட் பக்கேஜை போட்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு தேடுகிறோம். எத்தனை dead links.... "The file you are searching deleted due to violation of copyright" எண்டு எத்தனை அமெரிக்கத்தனமான மெசேஜ்கள். ஒரு வழியாக நல்ல வெப்சைட்டை கண்டுபிடித்தால் ஆயிரத்தெட்டு விளம்பரங்களும் PopUp களும் வந்து Screen ஐ நிறைக்கும் மிகப்பொற்மையாக close பண்ணனும். 

இதையும் தாண்டி டவுன்லோட் பண்ணி பார்த்தா அதுக்குள்ளே ரசிகப்பெருமக்களின் கூச்சல்கள் வேறு. ஷ்ஷ்ஷபா..... முடியல..... 😂

சினிமாவின் அசிங்கமான மறு பக்கம்

சினிமாவின் அசிங்கமான மறு பக்கம் 





(புகைப்படம் blurred due to ஆபாசம்)

பணத்துக்காக கணவன் அல்லாதவனை உடம்பை கட்டிப்பிடித்தல் முத்தமிடுதல் உதட்டைக்கடித்தல் ஆடையின்றி ஒரு போர்வைக்குள் இருத்தல் இன்னும்பல (திரையில் காட்டப்படாதவையும் உண்டு) என்பன விபச்சாரத்துக்கான வரைவிலக்கணம் என்றால் குறைந்த சம்பளம் வழங்கப்படும் திரைமறைவு விபச்சாரம் இழிவாக பார்க்கப்படுவதும், கோடிக்கணக்கில் பணம் புரளும் திரைத்துறை விபச்சாரம் செங்கம்பளம்(Red Carpet) போட்டு வரவேற்கப்படுவதும் சமூகத்தின் மனப்பிறழ்ச்சியையே காட்டுகிறது.

சிலர் நினைத்தனர் - 
திரைமறைவு விபச்சாரத்தில் ஆணுக்கு பணம் வழங்கப்படுவதில்லையே ஆனால் திரைத்துறை விபச்சாரத்தில் ஆணுக்கும் பணம் வழங்கப்படுகிறதே ஆதலால் இது புனிதமானது.... -த்த்தூ..... 

இன்னும் சிலர்-
திரை மறைவு விபச்சாரத்தை செய்பவனின் மனைவியோ குடும்பமோ அதை Live ஆக பார்ப்பதில்லை. ஆனால் திரைத்துறை விபச்சாரத்தை Live Shooting பார்க்க முடியும். ஆதலால் இது அதுவல்ல.... 
-த்த்த்த்தூ...... 

 
இந்த கூத்தாடி நடிகன் நடிகைகள் ஒருவகை மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள். ஒருத்தனுக்கு கூட உண்மையில சண்டை போட தெம்பில்லை 

ஆனால் நாற்பது பேருக்கு அடிக்கிற மாதிரி படம் காட்டுவானுங்க.... 
பஞ்சு டயலாக் பேசுவானுங்க... 
காசு கொடுத்தால் கண்டவளையெல்லாம் ஜட்டியோடு கட்டிப்புடிப்பானுங்க.... 
இவனுகள்ட பொண்ட்டாட்டிமாரும் இதை கண்டுக்காம காசிலேயே குறியா இருப்பாளுக...... 
வெட்கமில்லாமல் இவனுகளுக்கு ரசிகர் என்று சொல்லி சீரழியாமல் மக்களுக்கு உதவி செய்யுங்கள்.... 
இவனுகளால் தமிழ் கலாச்சாரம் எப்போதோ அழிந்துவிட்டது... 

கலைதான் வளர்க்கிறாய், காமம் இல்லை என்றால்... பேத்தி வயது குட்டிகளுடன் ஆடுகிறீர்கள் ஏன் உங்கள் மகள்மாருடன் டூயட் பாடக்கூடாது? அடுத்தவன் பெண்களை அள்ளி அணைக்கும் நீங்கள் ஏன் அடுத்த நடிகர்களுக்கு உங்கள் மனைவிமாரை அணைக்க விடுகிறீர்களில்லை? கலைதானே மெய்யல்லவே....

கேவலத்திலும் கேவலமான ஈனப்பிறப்புகள்...!!!

(துணை நடிகர் நடிகையர் சிலர் விதிவிலக்காம்...!!!)

இதெல்லாம் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையா என நீங்கள் கடுப்பாகுவது புரியுது.... நான் கெளம்புறன்...
ஜூட்...

எதற்கு இன்னுமோர் Blog?

எதற்காக இப்போ நீயும் இன்னோரு Blog (ப்ளாக்) துவங்குகிறாய்? இதைத்தானே கேட்க வாறீங்க? அருவாளை கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பொறுமையாய் கேளுங்கள்....

பல காரணங்கள்
நான் பல்லாண்டு காலமாக நடுநிலை வாசகனாகவே இருந்தவன். அப்போது ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களின் சேர்க்கை மலை போல் குவிந்து என்னால் தாங்க முடியாத பாரமானதும் இதற்கு ஓர் காரணம் எனலாம்..

இன்னும் பல... அவற்றுள் சில...

1. ஊடகங்களில் நிறைந்துள்ள ஆபாசம்... அசிங்கம்.... 
2. நடுநிலை பேணப்படாமை
3. பின்னூட்டங்கள் தணிக்கை செய்யப்படல்
4. தமிழ் கொலை
5. பாமரனுக்கு விளங்காத அதிமேதாவித்தனமான பாணி
6. எளிய சுருக்கமான விளக்கம் இல்லாமை
7. திரை மறைவில் குறித்த கட்சிகளை ஆதரித்தல்
8. புதிய உலக ஒழுங்கை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்
9. மூட நம்பிக்கைகளை வளர்த்தல்

வளரும்....

இதில் எழுத்துப்பிழைகள் இலக்கணப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். தமிழ் கொலை முடியுமானவரை தவிர்க்கப்படும்... 
தேவை உங்கள் ஆதரவு...