Thursday, September 29, 2016

மக்கள் பணத்தை திருடியவனுக்கு ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் கையை வெட்டி தண்டனை (IslamicPunishments)

 


அப்படியே உங்க சட்டங்களை எங்களுக்கும் படித்துத்தாருங்கள் ஐயா. 

பெண்களை கற்பழித்து கொலை செய்து வீதியில் வீசுகிறான் - நீங்கள் கல்லால் எறிந்து கொல்வீர்கள்; நாங்களோ உங்களை காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு அவனை ஜெயிலில் 7 வருடம் போட்டு சாப்பாடும் பாதுகாப்பும் மருத்துவச்செலவும் செய்வோம். சுயசரிதையும் எழுதலாம்.

தங்கைக்கு சீர்செய்ய வைத்திருந்த நகைகளை திருடுகிறான் நீங்கள் கையை வெட்டுகிறீர்கள்.
நாங்களோ உங்களை காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு அவனை ஜெயிலில் 2 அரை வருடம் போட்டு சாப்பாடும் பாதுகாப்பும் மருத்துவச்செலவும் செய்வோம். கல்லுடைக்கும் தொழிலும் உண்டு.

பெண்ணை நடு ரோட்டில் வைத்து வாளால் வெட்டிக்கொன்றாலும் அவனுக்கு மருத்துவச்செலவு, பாதுகாப்பு. அவனை கொல்லவேண்டும் என்றாலும் கரண்ட் கம்பி நாடகம் தேவை. ஆனாலும் ஆயிரம் விசாரணை உண்டு. நீங்களோ கொன்றவனுக்கு காலம் தாழ்த்தாது மரணதண்டனை அல்லது பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்டால் மட்டும் நட்ட ஈடு வழங்குகிறீர்கள். 

குடியை கெடுக்கும் மதுவை முழுதாக தடை செய்கிறீர்கள் மீறினால் சவுக்கால் அடிக்கிறீர்கள். இந்தச்சட்டம் இங்கிருந்தால் எத்தனையோ பெண்களின் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கும். எத்தனையோ பெண்கள் பல கணவன்மாரால் தினம்தினம் உதை வாங்கிச்சாவது, கணவன்மாரின் நன்பர்களால் கற்பழிக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கும்.

மது மாது சூது கொலை கொள்ளை என பஞ்சமாபாதகங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி குற்றத்தின் எண்ணிக்கையை மிக வெகுவாக குறைத்துள்ளீர்கள். நாங்களோ அவற்றையெல்லாம் பஞ்சமாபாதகங்கள் என்று சொல்வோம். ஆனால் வெள்ளையனின் சட்டத்தின்படி அனைத்துக்கும் லைசென்ஸ் கொடுப்போம்.

நாங்களோ உங்கள் சட்டத்தை காட்டுமிராண்டித்தனம் எனக்கூறிக்கொண்டு கொலை விழுந்தவுடன் மூன்று நாட்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் தேவை என்போம். நான்காவது நாள் கொலையை மறந்துவிட்டு இருக்கும் சட்டமே மனிதநேயமுள்ள சட்டமென்போம்.

உலக மேற்கத்தேய ஊடகங்களும் சில இந்திய காவி ஊடகங்களும் உங்களைப்பற்றி என்னென்னவெல்லாமோ கூறுகின்றன. அது பற்றி எனக்கு அறிவில்லை. ஆனால் நீங்கள் இந்திய நர்ஸுகளை உங்கள் விரல் படாமல் பத்திரமாக திருப்பி அனுப்பியபோது அந்த பெண்கள் இங்கு வந்து உங்களை பற்றி சிறந்ததொரு வாக்குமூலத்தை தந்தார்கள். அவர்களுடன் சேர்த்து உங்கள் சட்டங்களையும் சிறிது அனுப்பியிருக்கலாம். 

Thursday, September 22, 2016

ஈழத்தமிழர் காஷ்மீர் சகோதர விடுதலைக்காக (TamilsForKashmir)

இது ஈழத்தமிழர்களால் அனுப்பப்பட்ட ஒரு பதிவு. அதை நாங்கள் நடுநிலை தவறக்கூடாது என்பதற்காக பதிவிடுகிறோம். மாற்றுக்கருத்துக்களும் பதிவிடப்படும்.

 

போராட்டங்கள் ஓய்வதில்லை.... போராளிகள் வீழ்வதில்லை..... விடுதலைகள் தோற்பதில்லை.

ஈழத்தமிழர் தங்களின் விடுதலை வரலாற்று சகோதரர்களான காஷ்மீர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவழித்து உலகம் முழுவதும் தங்களாலான ஆதரவை தெரிவித்து ஆத்ம பிரார்த்தனைகளையும் செய்கின்றனர்.

காஷ்மீரும் ஈழமும் ஒரு கொடியில் மலர்ந்த இரு மலர்கள். ஈழ மலர் இந்திய ராணுவ ராஜதந்திர துணைகொண்டு இலங்கை அரசினால் சிதைக்கப்பட்டது. ஆனால் முழுமையாக துடைக்கப்படவில்லை.

காஷ்மீர் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.... ஆனால் இம்முறை எதிர்ப்பு பலமாக இருக்கிறது. ஈழ விடயத்தில் இந்தியா விட்ட தவறை காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான் செய்யாமலிருப்பதே காஷ்மீர் போராட்டத்தின் வலிமைக்கு முக்கிய காரணம். இந்தியா செய்தது தவ்றல்ல. துரோகம்.

காஷ்மீரிகளின் விடுதலை ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் மனங்களில் விடுதலை தீபத்தை மற்றொரு முறை ஏற்றும் என்பதில் சந்தேகமில்லை. காஷ்மீர் விடுதலை அழிக்கப்பட வேண்டுமென்று இலங்கையிலுள்ள ஒவ்வொரு சிங்களவனும் விரும்புகிறான். அது சொல்கிறது ஏகாதிபத்தியங்களின் ஒற்றுமையை.....

 

 

 

 

 

 

 

 

 

 

Tuesday, September 20, 2016

மனுஸ்மிருதி (Manusmriti)

பெண்கள் தலித்கள் பற்றி ஹிந்து தர்மம் சொல்லும் இன்னா நாற்பது. மனுஸ்மிருதி ஓர் ஆய்வு.


Manusmriti மனுஸ்மிருதி 

மனுஸ்மிருதி அல்லது மனு நீதி அல்லது மானுட தர்ம சாஸ்திரம் என்பது இந்து மதத்தினால் மானுட வர்க்கத்துக்கு வழங்கப்பட்ட சட்ட நூல். (மேற்கத்தேயர் டச்சு சட்டத்தை வழங்கியதை போல அல்லது இஸ்லாமியர்கள் உலகுக்கு ஷரீயா சட்டத்தை வழங்கியது போல என்று கொள்ளலாம்).

இது பிரம்மாவின் வார்த்தைகள். தர்மத்தின் அதி உயர்ந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள் அடங்கிய புனித நூல். இதில் 2690 வசனங்களும் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உபதேசிக்கப்பட்டுள்ளன. 

இது முதல் மனிதராகவும் முதல் இந்து மன்னனாகவும் கருதப்படும் மனு என்பவருக்கு பிரம்மாவினால் செய்யப்பட்ட போதனை. அந்த மனுவின் பெயரினாலேயே முழு மனித இனமும் அழைக்கப்படுகிறது (மனு, மனிதன், மானவ, Man)

இந்து மதத்தின் மத சம்பந்தமான அனைத்து விடையங்களும் பிராமணர்களாலேயே கற்கப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்ற வேளையில் மனு நீதியில் பிராமணர்களுக்கு பக்கச்சார்பான நீதி வழங்கப்பட்டிருப்பதாக பொதுவான ஒரு குற்றச்சாட்டு பிராமணரல்லாதாரால் முன்வைக்கப்படுகின்றது. 

மேலும் பெண்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதை பெண்ணுரிமை அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பதுடன் விமர்சனங்களுக்கும் உள்ளாக்குகின்றனர்.

வர்ணங்களின் அடிப்படையில் மனுநீதி தீர்ப்பழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலித்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மனுநீதியின் பிரதியை எரித்து பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. 

இவ்வாறு குற்றஞ்சாட்டுவோர் எடுத்துக்காட்டாக பின்வரும் சுலோகங்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறார்கள். (சில பதிப்புகளில் எண்கள் வேறுபடலாம் எடுத்துக்காட்டாக 22வது சில பதிப்புகளில் 5/167 எனவும் சில பதிப்புகளில் 5/164 எனவும் உள்ளது) 

1. “ஸ்வாபவ் ஏவ் நரினம்....” – 2/213.

பெண்ணின் இயல்பு இவ்வுலகில் ஆணை வசியம் செய்வது. இதன் காரணமாக, அறிவு பெற்றவர்கள் பெண்களுடன் இருக்கும்கால் பாதுகாப்புடனேயே இருப்பர்.

2. “அவிதம் சம்லம்………..” – 2/214.

பெண்களின் இயல்பை சரியாகப்பெற்ற ஒருத்தியால் முட்டாளை மட்டுமன்றி ஒரு ஞானியைக் கூட அழிவில் இட்டுச்செல்ல முடியும். அவ்விருவரும் ஆசைக்கு அடிமையாகி அலைவர்.

3. “மத்ரா ஸ்வஸ்த்ரா………..” – 2/215.

நல்ல அறிவு பெற்றவர்கள் தங்கள் தாய்மாருடனோ மகள்மாருடனோ சகோதரிகளுடனோ தனித்திருக்கார். ஏனென்றால் காம இச்சை என்பது மிகுந்த வலிமையுடையது. அது உணர்ச்சியை தூண்டிவிடும்.

4. “நவ்த்வாஹே……………..” – 3/8. 

சிவந்த கூந்தலுள்ளவளையோ, மிகுதியான உடல் உறுப்பொன்றை பெற்றவளையோ (எ.கா. ஆறாம் விரல்), அடிக்கடி தேகாரோக்கியம் குறைபவளையோ, உடலில் உரோமம் அற்றவளையோ அல்லது மிகுதியான முடி உள்ளவளையோ மற்றும் சிவந்த கண்கள் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்யக் கூடாது.

5. “ந்ரக்ஷ் வ்ரக்ஷ்………..” – 3/9. 

நட்சத்திரங்களின் பெயர் கொண்டவளையோ, மரங்களின் பெயர் கொண்டவளையோ, நதிகளின் பெயர் கொண்டவளையோ, குறைந்த ஜாதி பெண்களையோ, மலைகளின் பெயர் கொண்டவளையோ, பறவைகளின் பெயர் கொண்ட பெண்களையோ, பாம்புகளின் பெயர் கொண்ட பெண்களையோ, அடிமை பெண்களையோ அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் பெயர் கொண்ட பெண்களையோ யாரும் திருமணம் செய்ய வேண்டாம்.

6. “யஸ்தோ னா பாவேத்…..…..” – 3/10.

நல்லறிவு பெற்றோர் சகோதரன் இல்லாத பெண்ணையோ, சமூகத்தில் பிரபலமற்றவர்களின் பெண்களையோ திருமணம் செய்யக்கூடாது.

7. “உச்சயங்…………….” – 3/11.

நல்லறிவு பெற்றோர் உடல் அங்கங்களில் ஊனங்கள் அற்ற, அழகிய பெயருடைய, யானை போன்று அழகிய நடையுடைய, தலையிலும் உடலிலும் அளவான முடியுடைய மென்மையான கை கால்கள்களும் சிறிய பற்களையும் உடைய பெண்களையே திருமணம் செய்ய வேண்டும்.

8. “ஷுத்ர் ஐவ் பார்யா..……” – 3/12.

பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையோ, க்ஷத்ரிய பெண்ணையோ, வைஷிய பெண்ணையோ மட்டுமல்லாது ஒரு சூத்திர பெண்ணைக்கூட திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு சூத்திரன் ஓர் சூத்திர பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.

9. “நா ப்ரஹ்மன் க்ஷத்ரியா......” – 3/14. 

பிராமண, க்ஷத்ரிய, வைஷிய ஆண்கள் ஜாதி மாறி திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு துன்பம் வந்தாலும் அவர்கள் ஒரு சூத்திரப்பெண்ணை திருமணம் செய்யவே கூடாது.

10. "ஹீன் ஜதி ஸ்த்ரியம்……..” – 3/15. 

துவிப்பிறப்பு கொண்ட (பிராமண, க்ஷத்ரிய, வைஷிய) ஆண்கள் அறியாமையால் ஓர் கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்க நேரிட்டால் அதனால் அவர்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் கேவலத்துக்கு அவர்களே பொறுப்பு. இதற்கமைய அவர்களின் பிள்ளைகள் அனைவரும் சூத்திரர்களின் அனைத்து கேவலங்களையும் தம்மில் கொண்டிருக்கும்.

11. “சூத்ரம் ஷைனம்……” – 3/17. 

ஒரு கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்கும் ஒரு பிராமணன் அவனையும் அவனது முழுக்குடும்பத்தையும் இழிவுபடுத்துவதோடல்லாமல் கண்ணியங்களை இழக்கிறான் அத்துடன் பிராமண அந்தஸ்தையும் இழக்கிறான். அவன் பிள்ளைகள் யாவும் சூத்திரர்களே.

12. “தைவ் பித்ரியா………………” – 3/18. 

அத்துடன் (சூத்திரப்பெண்ணை மணமுடித்த) அந்த பிராமணனின் படையல்கள் எதுவும் பூஜைகளின் போது கடவுள்களாலோ அல்லது உயிரிழந்த ஓர் ஆத்மாவாலோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதிதிகளும் அவனுடன் சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள். மேலும் அவன் இறந்த பின் நரகத்தையே அடைவான்.

13. “ச்சண்டலாஷ் ……………” – 3/240. 

ஷ்ரத் திதி பூஜைகளின் போது பிராமணனுக்கு கொடுக்கப்படும் உணவை சண்டாளனோ (சூத்திரன்) பன்றியோ சேவலோ நாயோ அல்லது மாதவிடாய் பெண்ணோ பார்த்தலாகாது.

14. “நா அஷ்னியாத்…………….” – 4/43. 

பிராமணீயத்தை காக்கும் ஓர் உண்மையான பிராமணன் தன் மனைவியுடன் ஒன்றாக உண்ணமாட்டான். உண்ணும்போது அவளை பார்க்கமாட்டான். மேலும் அவள் உண்ணும்போதும், தும்மும்போதும், கொட்டாவி விடும்போதும் அவளை பார்க்கவும்மாட்டான்.

15. “நா அஜ்யந்தி……………….” – 4/44. 

ஒரு பிராமணன் அவனுடைய வலிமையையும் அறிவையும் பாதுகாக்கும் வகையில் கண்ணுக்கு மை பூசும் பெண்களையோ, நிர்வாணமான தன் உடலை கைகளால் தேய்ப்பவளையோ, பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பவளையோ பார்க்கமாட்டான். 

16. “மிர்ஷ்யந்தி…………….” – 4/217. 

வேசித்தனம் புரிபவளிடமிருந்தோ, பெண்களால் ஆளப்படும் குடும்பங்களிடமிருந்தோ, முதல் பத்து நாள் தாண்டாத இழவு வீட்டிலிருந்தோ உணவு வழங்கினால் ஒருவனும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

17. “பல்யா வா………………….” – 5/150. 

ஒரு சிறுமியோ பெண்ணோ அல்லது ஒரு கிழவியோ சுதந்திரமாக வேலை செய்ய கூடாது. அது அவள் வசிக்குமிடமாக இருப்பினும் சரியே.

18. “பல்யே பிடோர்வஷே…….” – 5/151. 

பெண்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் தனியே தன் காரியங்களில் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.

19. “அஷீலா கம்விர்தோ………” – 5/157. 

ஓர் கணவன் எந்தவொரு சிறப்பு தன்மையும் இல்லாதவனாக இருப்பினும், விலைமாதரிடம் செல்பவனாக இருப்பினும், கெட்டவனாக இருப்பினும், நீதியற்றவனாக இருப்பினும் பெண்கள் அவனை வணங்கி சேவகம் புரிய வேண்டும்.

20. “நா அஸ்த் ஸ்த்ரினாம்……..” – 5/158. 

பெண்கள் எந்தவொரு பூஜைகளையும் செய்யவோ அர்ப்பணிக்கவோ, விரதம் இருக்கவோ கடவுளின் அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் ஒரே கடமை கணவனின் சொல் கேட்பதும் அவனை சந்தோசப்படுத்துவதுமே; அந்த ஒரே காரணத்துக்காக அவள் சுவர்க்கம் செல்வாள்

21. “கமாம் தோ……………” – 5/160. 

(கணவன் இறந்த பின்) அவள் தன்னுடல் அழியும் வரை தூய்மையான மலர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் வேர்களிலும் அமர வேண்டும். தன் கணவன் இறந்த பின் எந்த ஒரு ஆணின் பெயரைக்கூட அவள் உச்சரிக்க கூடாது. 

22. “வ்யாபாச்சரே…………” – 5/167 (சில பதிப்புகளில் 5/164)

கணவனின் கடமைகளை நிறைவேற்ற தவறும் ஒரு பெண் கேவலப்படுகிறாள், ஒர் தொழுநோயாளி ஆகுவாள், இறந்த பின் ஒரு குள்ள நரியின் கருப்பையை அடைவாள்.

23. “கன்யம் பஜந்தி……..” – 8/364. 

உயர் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரியும் ஒரு பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டாள். ஆனால் கீழ் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரிந்தால் அவள் தண்டிக்கப்படுவதுடன் ஊர்விலக்கு செய்யப்பட வேண்டும்.

24. “உத்மம் செவ்மந்த்சோ…….” – 8/365. 

கீழ் ஜாதிக்காரன் ஒருவன் உயர் ஜாதி பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்தால் கீழ் ஜாதி ஆணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பெண்ணும் கீழ் ஜாதியாக இருப்பின் அவன் அவளுக்குரிய இழப்பீட்டுக்குரிய தொகையை தந்தால் போதுமானது.

25. “யா தோ கன்யா…………….” – 8/369. 

கன்னித்திரை கிழிந்திருப்பவளுக்குரிய தண்டனையாவது அவளை மொட்டை அடித்து அவளின் இரண்டு விரல்களை வெட்டிவிட வேண்டும். அத்துடன் அவளை கழுதை மேல் ஏற்றி பவனிவரச்செய்ய வேண்டும்.

26. “பர்தரம்…………….” – 8/370. 

ஒரு பெண் தன் உயர்வையோ தன் குடும்பத்தின் உயர்வை பற்றியோ பெருமைகொண்டு தன் கணவனுக்குரிய கடமைகளை உதாசீனப்படுத்தினால் அரசன் அவளுக்கு வழங்கும் தண்டனையாவது எல்லோரும் பார்க்குமிடத்தில் அவளை வெறிநாய்களுக்கு முன்னால் எறிதலாகும்.

27. “பிதா ரக்ஷதி……….” – 9/3. 

பெண்கள் சுதந்திரமாக வாழ இயலாதவர்கள் ஆதலால் அவர்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும்.

28. “இமாம் ஹி சர்வ்………..” – 9/6. 

மனைவி மீது பூரண அதிகாரத்தை செலுத்துவது ஒரு கணவனின் கடமையாகும். உடல் ரீதியாக பலஹீனமான ஆணாகவிருப்பினும் அவனும் தன் பூரண அதிகாரத்தை செலுத்தியே ஆகவேண்டும்.

29. “ப(ட்)டி பர்யம் ……….” – 9/8. 

ஒருவனின் மனைவி கருத்தரிக்கும் போது அவளின் கணவனே அவள் கர்ப்பத்தில் கருவாக உருவாகி அவனே அவளுக்கு மகனாகவும் பிறக்கிறான். இதன் காரணமாகவே பெண் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள்.

30. “பணம் துர்ஜன்………” – 9/13. 

பெண்களின் கெட்ட குணங்கள் ஆறு அவையாவன: மது அருந்துதல், கெட்டவர்களோடு சேர்தல், கணவனை பிரிதல், அலைந்து திரிதல், நீண்ட நேரம் உறங்குதல், அதிகமாக கதைத்தல் ஆகியனவாம்.

31. “நய்டா ரூபம்……………” – 9/14. 

அவ்வகையான (9/14) பெண்கள் கற்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள், மேலும் வயது பாராமல் எந்த ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார்கள். 

32. “பூன்ஸ் ச்சல்யா…………” – 9/15. 

மேலும் அத்தகையவர்கள் ஆண்கள் மீதுள்ள மோகத்தாலும் அடக்க முடியாத கோபத்தாலும், இரக்க குணமின்மையாலும் தங்கள் கணவன்மாருக்கு உண்மையாணவர்களாக இருக்கமாட்டார்கள்.

33. “நா அஸ்தி ஸ்த்ரினம்………” – 9/18. 

பெண்கள் நம்காரத்தின்போதோ ஜத்காரத்தின் போதோ வேத மந்திரங்களை ஓதக்கூடாது ஏனென்றால் பெண்கள் வேத வசனங்களில் உறுதியும் அறிவும் அற்றவர்கள். மேலும் பெண்கள் சுத்தமற்றவர்கள் மற்றும் அசத்தியத்தை பிரதிபலிப்பவர்கள்.

34. “தேவ்ரா ஸபிண்டா………” – 9/58. 

கணவனுடன் கூடி சந்ததியை பெற்றெடுக்க முடியாத பெண் தன் கணவனின் சகோதரனுடனோ அல்லது கணவனின் வேறு உறவினர்களுடனோ கலந்து சந்ததியை உண்டாக்கிக்கொள்ள முடியும்.

35. “வித்வயம்…………….” – 9/60. 

ஒரு விதவையை பாதுகாக்க நியமிக்கப்பட்ட ஒருவன் இரவில் அவளை அணுகி வெண்ணெய் பூசி ரகசியமாக ஒரு மகனை பெற்றெடுக்க முடியும். ஆனால் எக்காரணம் கொண்டும் இரண்டாவது மகனை பெற்றெடுக்க முடியாது.

36. “யதா விதி……………..” – 9/70. 

நிலைபெற்ற சட்டப்பிரகாரம் மனைவியின் சகோதரி ஆகிறவள் வெண்ணிற ஆடை அணிந்து தூய எண்ணத்துடன் தன் சகோதரியின் கணவனுடன் ஓர் கர்ப்பம் தரிக்கும் வரை இணைந்திருக்க முடியும். 

37. “அதி க்ரமே……………” – 9/77. 

கணவன் சோம்பேறியாக இருப்பினும் மதுவுக்கு அடிமையானவனாக இருப்பினும் நோயாளியாக இருப்பினும் மனைவி அவனது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் இல்லாது போனால் அவளை மூன்று மாதம் விலக்கி வைப்பதுடன் அவள் அணிகலன்களும் களையப்பட வேண்டும்.

38. “வந்த்யாஷ்தமே…….” – 9/80. 

ஒரு மலடி எட்டாவது வருடத்திலும் பிள்ளைகளை இழந்தவள் பத்தாவது வருடத்திலும் பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றவள் பதினோராவது வருடத்திலும் நீக்கப்பட்டு கணவன் வேறொருத்தியை மணக்க முடியும். சண்டை பிடிப்பவளோ உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

39. “த்ரின்ஷா……………….” – 9/93. 

மதச்சடங்குகளை நிறைவேற்றுவதில் ஏதாவது ஒரு தடங்கல் வந்து ஆண் திருமணம் முடிக்கவேண்டி ஏற்பட்டால் இருபத்தி நான்குக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள ஆண் எட்டுக்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட வயதுள்ளவளை திருமணம் செய்ய வேண்டும்.

40. “யம் ப்ரஹ்மன் ஸ்தோ…….” – 9/177. 

ஒரு பிராமணன் ஒரு சூத்திர ஸ்த்ரீயை திருமணம் செய்தால் அவர்களின் மகன் பர்ஷவ் என்றோ சூத்திரன் என்றோ அழைக்கப்படுவான் இதற்கு காரணம் அவன் சமூகத்தில் ஒரு பிணத்தை போன்றவன்.